ETV Bharat / bharat

குஜராத்தில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள்... அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பிரதமர்...

author img

By

Published : Jul 28, 2022, 6:25 PM IST

குஜராத்தில் ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து, அடிக்கல் நாட்டினார்.

pm-modi-inaugurates-multiple-projects-of-sabar-dairy-in-gujarats-sabarkantha
pm-modi-inaugurates-multiple-projects-of-sabar-dairy-in-gujarats-sabarkantha

காந்திநகர்: குஜராத் மாநிலம் சபர்கந்தாவில் உள்ள சபர் பால்பண்ணையில் ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பலவகை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 28) தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பிரதமர் கூறுகையில், "இந்தத் திட்டங்கள், உள்ளூர் விவசாயிகளுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் வருவாயையும் ஈட்டித்தரும். இந்த மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும்.

இந்த திட்டத்தில் முக்கிய பங்காற்றும் சுகன்யா ஸ்மிருதி திட்ட பயனாளிகளுக்கும், பெண் பால் உற்பத்தியாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பத்துடன் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுவதால், சபர் பால் பண்ணையின் உற்பத்தி திறன் மேலும் கூடுதலாகும்.

இங்கு நான் முதலமைச்சராக இருந்தபோது மக்களின் ஒத்துழைப்பு இந்தப் பகுதியின் வளர்ச்சியை மேம்படுத்த உதவியது. இந்த முயற்சிகளின் முக்கிய அம்சமாக இருந்தவை கால்நடை வளர்ப்பும், பால் பண்ணை தொழிலும்தான். கால்நடை தீவனம், மருந்து ஆகியவற்றை வழங்குவதன் மூலம், கால்நடை பராமரிப்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கால்நடைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சையை ஊக்கப்படுத்திய அலுவலர்களுக்கு நன்றி. கடந்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் குஜராத்தின் பால்வளச் சந்தை ஒரு லட்சம் கோடி ரூபாய் வியாபாரத்தை எட்டியுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.