ETV Bharat / bharat

மேற்கு வங்க வெள்ளம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்

author img

By

Published : Aug 5, 2021, 7:24 AM IST

மேற்கு வங்க வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

http://10.10.50.90:6060///finaloutc/english-nle/finalout/29-July-2021/12612674_pm-narendra-modi_jpg.jpg
பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால், டிவிசி (Damodar Valley Corporation dams) அணைகள் திறக்கப்பட்டன. இதன் காரணமாக, புர்பா பர்தாமன், பாசிம் பர்தமான், பாசிம் மெடினிபூர், ஹூக்லி, ஹவுரா உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், நிவாரணப் பொருள்கள் தடையின்றி வழங்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அந்த வகையில் இதுவரை 2.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் அழைத்து விசாரித்தார். இந்த நிலையில், பிரதமரின் அலுவலக ட்விட்டரில், "மேற்கு வங்க வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேற்குவங்க வெள்ளம்: 7 பேர் உயிரிழப்பு, 2.5 லட்சம் பேர் வெளியேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.