ETV Bharat / bharat

கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மேற்கு வங்க ஆளுநர் ஆய்வு

author img

By

Published : May 10, 2021, 3:50 PM IST

சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட கலவரங்களால் பாதிக்கப்பட்ட இடங்களை மேற்குவங்க ஆளுநர் நேரில் பார்வையிட உள்ளார்.

West Bengal
West Bengal

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 2-ஆம் தேதி வெளியானது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றார்.

தேர்தல் முடிவுக்குப் பின்னர் அம்மாநிலத்தில் வெடித்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து உடைமைகளை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கலவரத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் கலவரம் ஆனது பாஜகவினரை குறிவைத்தே நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் அழுத்தம் அளித்து வரும் நிலையில் அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கர் கலவரம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய கலவரம் மிகவும் துரதிஷ்டவசமானது என தெரிவித்த அவர் நேரில் ஆய்வு செய்து உரிய முறையில் விசாரணை நடைபெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.