ETV Bharat / bharat

நாக்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஓமன் நாட்டு விமானம்

author img

By

Published : Nov 3, 2022, 7:37 PM IST

ஓமன் நாட்டிலிருந்து தாய்லாந்து நோக்கி கிளம்பிய ஓமன் ஏர் விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறங்கியது.

Oman Air flight lands in Nagpur as passenger takes ill
Oman Air flight lands in Nagpur as passenger takes ill

மும்பை: ஓமன் நாட்டின் மஸ்கட்டில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நோக்கி WY 0815 என்ற ஓமன் ஏர் விமானம் இன்று (நவ. 3) காலை புறப்பட்டது. இந்த விமானம் மதியம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து நாக்பூர் விமான நிலையம் தரப்பில், மஸ்கட்-பாங்காக் விமானத்தில் பயணி ஒருவருக்கு நாடுவானில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க திட்டமிடப்படாமல் நாக்பூரில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

சுமார் 1.45 மணியளவில் தரையிறங்கிய உடன் பாதிக்கப்பட்ட பயணியை மீட்டு கிம்ஸ் கிங்ஸ்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அதன்பின் அந்த விமானம் தாமதாக பாங்காக் நோக்கி புறப்பட்டது.

முதல்கட்ட தகவலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ஓமன் நாட்டை சேர்ந்த நாஜிக் (47) என்பதும், அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அவர் மருத்துவமனையில் நலமாக உள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இண்டிகோ விமானத்தில் தீ... பயணிகள் அச்சம்... டெல்லியில் அவசர தரையிறக்கம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.