ETV Bharat / bharat

பெண் வக்கீலை கவர எஸ்ஐ வேடமிட்ட நபர் - ஐபிசி பிரிவுகளை கேட்டதும் கிழிந்த முகத்திரை

author img

By

Published : Nov 18, 2022, 8:41 PM IST

பெண் வழக்கறிஞரை கவர்வதற்காக எஸ்ஐ வேடம் போட்ட ஓலா ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். பெண் வழக்கறிஞர் சட்டப்பிரிவுகள் குறித்து கேட்டபோது, அவர் போலி எஸ்ஐ என்பது தெரியவந்துள்ளது.

Ola
Ola

பரேலி: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச்சேர்ந்த சத்யம் திவாரி என்ற நபர், சமூக வலைதளம் மூலம் பெண் வழக்கறிஞர் ஒருவருடன் நட்பாகப் பழகியுள்ளார். வழக்கறிஞரை கவர்வதற்காக தான் காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.

இருவரும் சமூக வலைதளம் மூலம் பழகி வந்த நிலையில், நேரில் சந்திக்க வரும்படி வழக்கறிஞர் அழைத்துள்ளார். இதையடுத்து சத்யம் திவாரி பரேலிக்கு வந்தார். காவல்துறை அலுவலர் போலவே உடையணிந்து கொண்டு, போலி வாக்கி டாக்கி, போலி அடையாள அட்டை உள்ளிட்டவற்றையும் கொண்டு வந்துள்ளார்.

இதைக் கண்ட பெண் வழக்கறிஞருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கேட்டபோது, தான் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக சத்யம் திவாரி கூறியுள்ளார். இதையடுத்து, சட்டப்பிரிவுகள் குறித்து வழக்கறிஞர் கேள்வி எழுப்பிய நிலையில், வசமாக மாட்டிக்கொண்ட திவாரி செய்வதறியாமல் திகைத்து நின்றார். இதையடுத்து, அவர் போலி என்பதை கண்டறிந்த பெண் வழக்கறிஞர், போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். பின், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் போலி எஸ்ஐ சத்யம் திவாரியை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் திவாரி, ஓலா டாக்ஸி ஓட்டுநர் என்பதும், பெண் வழக்கறிஞரை கவர்ந்து திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்திலேயே இவ்வாறு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.