ETV Bharat / bharat

பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழும் தனுசு ராசிக்காரர்கள்..! உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 6:13 AM IST

Today Horoscope: பண்டிகை தினமான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்றைய நாள் எப்படி அமையும் எனப் பார்க்கலாம்.

November 12 Horoscope For 12 zodiac signs in tamil
இன்றைய ராசிபலன்

மேஷம்: உங்கள் மனதிற்குப் பிடித்தவரைச் சந்தோஷப்படுத்த நீங்கள் முயற்சி செய்யக்கூடும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது, ஏதேனும் ஒரு காரணத்திற்காக வருத்தம் இருக்கலாம். எனினும், இன்று இன்று இரவில் நடக்கும் சந்திப்பில், புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு அதிர்ச்சிகள் காத்திருக்கக் கூடும். எதிர்பார்க்கப்பட்ட படி எதுவும் நடக்காது. திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். நாள் முழுவதும் பிரச்சனை இருக்கும். ஆனால் பொறுமையாகச் செயல்பட்டு நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள்.

மிதுனம்: இன்று அதிர்ஷ்ட தேவதை உங்களைப் பார்த்துப் புன்னகைக்கிறார். நீங்கள் பொதுவாகக் கூச்ச சுபாவம் உள்ளவர்கள். ஆனால் இன்று வித்தியாசமாக, நீங்கள் வெளியில் சென்று உங்களுக்கு உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இந்த தற்காலிக மாற்றம் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

கடகம்: பணியிடத்தில், சிறந்த நட்பு பாராட்டக்கூடிய உங்களது திறமையின் காரணமாக, முக்கிய திட்டங்களில் ஒற்றுமையாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஆனால் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், அதனையே முழுமையாகப் படித்து அறிந்து கொள்வது நல்லது. ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும் போதும் கவனமாகச் செயல்படுவது முக்கியம்.

சிம்மம்: உங்கள் சக பணியாளர்களுடனான உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும், புதிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இது சிறந்த நாளாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வரக்கூடும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். விருந்தினர்களுக்காக நீங்கள் சிறந்த விருந்து கொடுக்கக்கூடும்.

கன்னி: வர்த்தகம், பொழுதுபோக்கு ஆகிய இரண்டிற்கும் நீங்கள் சமமான முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விருந்து ஒன்றில் கலந்துகொண்டு நீங்கள் மகிழக்கூடும். உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவிற்குச் செலவு இருக்கும். எனினும் நீங்கள், செலவு செய்யும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

துலாம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது பணியில் உள்ள ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: உறவுகள், வாழ்க்கையின் வேர்களாகும். உங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் உங்களைச் சுற்றி உள்ளவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும். அவர்களது முக்கியத்துவத்தை உணரச் செய்யவும். கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதைத் தீர்க்கவும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது.

தனுசு: பிரச்சினைகள் அல்லாத குழந்தைப் பருவத்திற்குச் செல்ல நீங்கள் விரும்புவீர்கள். திட்டமிடப்படாத சுற்றுலா பயணம் போன்றவற்றை மேற்கொள்ள நீங்கள் விரும்பலாம். பழைய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம், மலரும் நினைவுகள் மூலம், மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

மகரம்: இன்று, பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சக பணியாளர்கள் உங்கள் வெற்றியைப் பார்த்துப் பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளில் வரும் சோதனைகளைத் திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.

கும்பம்: வலியைக் கொடுக்கும் உங்கள் கடவுள், சுகத்தையும் வழங்குவார்கள். இன்றைய நாளின் தொடக்கத்தில், செய்யவேண்டிய பணி அதிகம் இருந்தாலும், இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகச் செய்து முடித்து விடுவீர்கள். அதனால் நீங்கள் சோர்வாக உணரக்கூடும். குளிர்ந்த நீரில் குளித்து விட்டு அமைதியாக ஓய்வு எடுக்கவும்.

மீனம்: நீங்கள் மோசமான குணமும், பொறாமை குணமும் கொண்டவரல்ல. ஆனால் இது போன்ற தன்மை ஏற்படாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒருவர் உங்கள் புகழையும், மதிப்பையும் கெடுக்கும் எண்ணத்தில் செயல்படலாம். எனினும் கோபப்படாமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானமாக உங்கள் அன்றாட பணியைக் கவனிக்கவும்.

இதையும் படிங்க: Diwali wishes In Tamil: தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.