ETV Bharat / sukhibhava

Diwali wishes In Tamil: தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 7:56 PM IST

Updated : Nov 12, 2023, 6:33 AM IST

வாழ்த்துக்கள் எப்போதும் பிறருக்கு நாம் வழங்கும் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள். இந்த தீபாவளி பண்டிகையில் வாழ்த்துக்களைப் பகிர்ந்து மகிழ்வோம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: "வாழ்த்து" இந்த வார்த்தை பல மொழிகளில், பல கோணங்களில், பல நாடுகளில் காலம் காலமாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு இருந்தே ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லிக்கொள்ளும் கலாச்சாரம் இருந்ததாகப் பல வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!
தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

இந்தியாவைப் பொருத்த வரை வாழ்த்து என்பது பன்முகத்தன்மை கொண்டது. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதம் சார்ந்த பண்டிகைகள் மற்றும் ஒறுமை பாட்டிற்கான அடையாளங்கள் உள்ளிட்ட பல கோணங்களில் வாழ்த்துக்களும் மாறுபடுகின்றன.

தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!
தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

அதேபோல இந்தியாவின் பல மாநிலங்களில் அவரவர் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த வாழ்த்துகள் புழக்கத்தில் இருக்கின்றன. அந்த வகையில், தென் இந்திய மாநிலங்களில் குறிப்பாகத் தமிழ் நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் தீபாவளி பண்டிகை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!
தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

இந்த தீபாவளி பண்டிகையில் மக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து, புத்தாடை அணிந்து, பலகாரங்கள் செய்து, வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து லட்சுமி குபேர பூஜை செய்து, பட்டாசு வெடித்து தங்கள் கொண்டாட்டங்களை வெளிப்படுத்துகின்றனர்.

தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!
தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

இதையும் படிங்க: தீபாவளி 2023: பண்டிகை கால உணவுப் பழக்கம்: குழந்தைகள் அதிகமாக உண்பதை தவிர்ப்பது எப்படி?

இந்த கொண்டாட்டத்தின்போது மக்கள் ஒருவருக்கொருவர் அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!
தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

இந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், உறவுகளில் நெருக்கம் ஏற்படுவதுடன், மனக் கசப்புகள் விலகும், நீண்ட நாள் பேசாமல் இருந்தவர்கள் கூட இந்த பண்டிகையைச் சாக்காக வைத்து வாழ்த்து தெரிவித்து உறவைப் புதுப்பித்துக்கொள்வார்கள்.

தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!
தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

வரும் தலைமுறைக்கு அந்த வாழ்த்தின் ஆர்த்தமும், முக்கியத்துவமும் பாரம்பரிய கலாச்சாரத்தை எடுத்துரைக்கும். அந்த வகையில் ஆண்டுதோறும் தீபாவளி வாழ்த்துக் கவிதைகளை மக்கள் தங்களுக்குத் தெரிந்தார் போல் எழுதி பரிமாறிக்கொள்வது வழக்கமாக இருக்கும் நிலையில், உங்கள் மனதில் இருக்கும் வாழ்த்துக்களை வார்த்தைகளாகக் கோர்த்து இருக்கிறோம்.

தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!
தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

உங்கள் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் இந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்து உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். உறவுகள் புதுப்பிக்கப்படட்டும், உங்கள் தீபாவளி மகிழ்ச்சி இரட்டிப்பாகட்டும். ஈடிவி பாரத் தமிழ் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!
தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

இதையும் படிங்க: தித்திக்கும் தீபாவளியை தீங்கில்லாமல் கொண்டாடுவது எப்படி? - தீயணைப்புத் துறை பயிற்சி மைய இயக்குனர் மீனாட்சி கூறும் அட்வைஸ்!

Last Updated : Nov 12, 2023, 6:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.