ETV Bharat / bharat

"பிரபாகரன் மரணம் - எனக்கு எதுவுமே தெரியாது..." முன்னாள் இலங்கை அதிபர் சிறிசேனா பல்டி!

author img

By

Published : Jul 3, 2023, 8:48 PM IST

Updated : Jul 3, 2023, 9:09 PM IST

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக அப்போது தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக இருந்த தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்து உள்ளார்.

not-know-any-information-that-prabhakaran-was-killed-former-sri-lankan-defense-minister
பிரபாகரன் கொல்லப்பட்டதாக எந்தவொரு தகவளும் தமக்கு தெரியாது- முன்னாள் இலங்கை பாதுகாப்பு அமைச்சர்

கொழும்பு: இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் உச்ச கட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால் அண்மையில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் எனக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசென தெரிவித்து இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை யாழ்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழீழ விடுதலை போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் 2 மாதங்கள் மட்டுமே தான் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்ததாகவும், பிரபாகரனுக்கு அப்போது மரபணு சோதனை நடைபெற்றது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணுப் பரிசோதனைக்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, இறுதி யுத்தத்தில் மீட்கப்பட்ட உடல் அவருடையதே என உறுதி செய்யப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறி இருந்தது. இருப்பினும் அது தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறுவதற்கு முயற்சித்த போதிலும் அதனை இலங்கை ராணுவத்தினர் மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

மரபணு பரிசோதனை தொடர்பாக இன்றளவும் தனக்கு எதுவும் தெரியாது என்று மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார். இலங்கையின் அதிபராக மைதிரிபால சிறிசேனா இருந்த போது, "நானே போரை முன்னின்று நடத்தினேன். பிரபாகரனை வீழ்த்தியதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது" என பேசி இருந்த நிலையில் தற்போது அதற்காக மாற்றான கருத்தை அவர் பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிறிசேனா, அப்போதைய அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே, வெளிநாட்டில் இருந்த போதிலும் பாதுகாப்பு சார்ந்த உத்தரவுகளை அவரே வழங்கி வந்ததாகவும், இருப்பினும் யுத்தத்தை வழிநடத்திய தமக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தம்மிடம் பொறுப்புகளை கொடுத்துவிட்டு அதிபர் மஹிந்த ராஜபக்சே, வெளிநாடு சென்று இருந்தார் என்றும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு இருந்த செயல்பாடுகளையே தாம் தொடர்ந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் இறுதி யுத்தத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக எந்தவொரு தகவலும் தமக்கு தெரியாது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதையும் படிங்க : செந்தில் பாலாஜி மீதான வேலை மோசடி வழக்கு- போக்குவரத்துத்துறை ஊழியர்களிடம் தீவிர விசாரணை

Last Updated : Jul 3, 2023, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.