ETV Bharat / bharat

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு பரிசீலனையில் இல்லை

author img

By

Published : Jul 29, 2022, 5:01 PM IST

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

no-proposal-under-centres-consideration-for-menstrual-leave-of-central-govt-employees-smriti-irani
no-proposal-under-centres-consideration-for-menstrual-leave-of-central-govt-employees-smriti-irani

டெல்லி: இதுகுறித்து மாநிலங்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், "மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும் விடுப்பு விதிகள், 1972இல் மாதவிடாய் விடுப்புகளுக்கான விதிமுறைகள் கிடையாது.

இந்த விதிகளில் மாற்றம் கொண்டுவந்து மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படவில்லை. மேற்கூறிய விதிகளின் கீழ், ஈட்டிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு, கூடுதல் சாதாரண விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, மாற்றியமைக்கப்பட்ட விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மருத்துவச் சான்றிதழ் விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் பெண் அரசுப் பணியாளருக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், 2011ஆம் ஆண்டு முதல் 10-19 வயதுக்குட்பட்ட மகளிர் இடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள், மக்களிடையே மாதவிடாய் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பது, சானிட்டரி நாப்கின்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராஜஸ்தானிலிருந்து கேரளாவிற்கு 12 சிறுமிகள் கடத்தல்... பாதிரியார் உள்பட 3 பேர் கைது....

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.