ETV Bharat / bharat

புதுமணத்தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரை வழங்கும் புதிய திட்டம்

author img

By

Published : Aug 14, 2022, 5:21 PM IST

ஒடிசா அரசு குடும்பக்கட்டுப்பாடு திட்டம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரை வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Etv Bharatபுதுமணத் தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரை வழங்கும் புதிய திட்டம்
Etv Bharatபுதுமணத் தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரை வழங்கும் புதிய திட்டம்

புபனேஷ்வர்: உலக அளவில் குழந்தையின்மை பிரச்னைக்காக அனைவரும் சிகிச்சை எடுத்து வரும் சூழ்நிலையில், ஒடிசா அரசு குழந்தை பெற்றுக்கொள்ளமால் இருக்க கருத்தடை மாத்திரைகளை திருமணமானவர்களுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் தம்பதியினரிடையே குடும்பக்கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது.

இந்தத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கு, 'நபா தம்பதி கிட்' அல்லது 'நை பஹல் கிட் எனப் பெயரிட்டுள்ளது, ஒடிசா மாநில அரசு. குடும்பக்கட்டுப்பாட்டின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) உதவியுடன் 'நை பஹல் திட்டம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த தொகுப்பில் திருமணப்பதிவுப் படிவம், ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்த சிறு புத்தகம் ஆகியவை இந்த கிட்டில் இருக்கும். இது தவிர, இந்த கிட்டில் கர்ப்ப பரிசோதனை கருவி, சீர்ப்படுத்தும் பொருட்களான துண்டுகள், சீப்பு, நெயில் கட்டர் மற்றும் கண்ணாடி போன்றவையும் இருக்கும்.

இது குறித்து குடும்பக் கட்டுப்பாடு இயக்குநர் டாக்டர் பிஜய் பானிக்ரஹி கூறுகையில், "புதிதாக திருமணமான தம்பதிகள் குடும்பக் கட்டுப்பாடு முறைகளைப்பின்பற்ற ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு 'நபா தம்பதி கிட்' அல்லது 'நை பஹல் கிட்' எனும் இந்த தொகுப்பை பரிசளிக்கிறோம். குடும்பக்கட்டுப்பாடு, ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்கள் குறித்த தகவல்கள் கிட்டில் உள்ளன. அவசர கருத்தடை மாத்திரைகள் உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு செப்டம்பர் முதல் இவை விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் இவர்களுக்கு கிட்களை வழங்குதல் மற்றும் பதிவேடு வைத்திருக்கும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. புதுமணத் தம்பதிகளுக்கு குடும்பக் கட்டுப்பாட்டின் நன்மைகளைத் தெரிவிக்க அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வீட்டை மத வழிபாட்டுத்தலமாகவோ பிரசாரம் செய்யும் இடமாகவோ மாற்ற அனுமதிக்க முடியாது என உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.