ETV Bharat / bharat

நீட் தேர்வு முடிவுகள்: நான்கு பேர் ஒரே மதிப்பெண் எடுக்க எப்படி ஒருவர் மட்டும் முதலிடம்?

author img

By

Published : Sep 8, 2022, 9:23 PM IST

நாடெங்கும் நடந்த நீட் தேர்வின் முடிவுகள் நேற்று(செப்.7) இரவு வெளியாகியுள்ள நிலையில், அதில் நான்கு பேர் முதல் மதிப்பெண்ணை எடுத்திருக்க எப்படி ஒருவர் மற்றும் அதில் முதலிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்து காண்போம்.

நீட் தேர்வு முடிவுகள்: நான்கு பேர் ஒரே மதிப்பெண் எடுக்க, எப்படி ஒருவர் மட்டும் முதலிடம்..?
நீட் தேர்வு முடிவுகள்: நான்கு பேர் ஒரே மதிப்பெண் எடுக்க, எப்படி ஒருவர் மட்டும் முதலிடம்..?

நீட் தேர்வில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு முடிவுகள் நேற்று(செப்.7) இரவு வெளியிடப்பட்டது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தனிஷ்கா எனும் மாணவி முதலிடத்தைப் பிடித்தார். மேலும், இவருடன் சேர்ந்து மூன்று மாணவர்கள் 715 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். அப்படி இருக்க தனிஷ்கா மட்டும் எப்படி முதலிடத்தைப் பிடித்தார்..?.

அதைப் பற்றி சற்று விரிவாகக் காணலாம். தனிஷ்காவுடன் சேர்த்து டெல்லியைச் சேர்ந்த வட்ஷா ஆஷிஸ் பாத்ரா, ரிஷிகேஷ் கங்குலே, கர்நாடகாவைச் சேர்ந்த ருச்சா பவாஷே ஆகியோரும் அதே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் மொத்தம் 9.93 லட்ச மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஒரே மதிப்பெண்ணை இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எடுக்கும் போது அவர்களுக்குள் தரவரிசையில் பட்டியலிடும் முறைக்கு வயதைக் கருத்தில் கொள்லும் முறையை தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு மாற்றியமைத்திருந்தது. மேலும், ஒரே மதிப்பெண்களை எடுத்த நான்கு பேரரில் உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை.

ஒருவேளை அதிலும் ஒரே மதிப்பெண் எடுத்திருந்தால், வேதியியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். அடுத்தது, இயற்பியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்ணும், உயிரியல் பாடத்தில் எத்தனை கேள்விகளுக்கு தவறாக பதிலளித்திருந்தார், எத்தனை கேள்விகளுக்கு சரியாக பதிலளித்திருந்தார் என்பதும் கணக்கில் எடுக்கப்பட்டு முதல் இடத்தைப் பிடித்தவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் நீட் தேர்வு 497 நகரங்களி, 3570 மையங்களில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நடத்தப்பட்டது. அதற்கான விடைக்குறிப்புகள் ஆகஸ்ட் 31 ஆம்தேதி வெளியானதைத் தொடர்ந்து நேற்று(செப்.7) தேர்வின் முடிவுகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வீரப்பன் காட்டில் நடக்கும் வழிபாடு... சாமியாக மாறிய வனத்துறை அதிகாரி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.