ETV Bharat / bharat

'முடிவிலிருந்து பின்வாங்குவது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதாக ஆகாது'- சச்சின் பைலட்

author img

By

Published : Jan 4, 2021, 10:58 AM IST

ஒரு அரசு அதன் முடிவிலிருந்து பின்வாங்குவது என்பது அந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக ஆகாது என ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் சச்சின் பைலட் கருத்து தெரிவித்துள்ளார்.

Nationalism not giving speeches from Nagpur: Sachin Pilot
Nationalism not giving speeches from Nagpur: Sachin Pilot

ஜெப்பூர்: ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சரான சச்சின் பைலட் நேற்று (ஜன. 03) ராஷ்டிரிய சுயம்சேவக் அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது பேசிய அவர், "விவசாயிகளின் நலன் குறித்து பேசினால் அது உண்மையான தேசியவாதம். ஆனால், நாக்பூரிலிருந்து அரை கால்சட்டை அணிந்து உரைகளை நிகழ்த்துவது தேசியவாதம் அல்ல" என விமர்சித்தார்.

புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளை இருளில் தள்ளுகிறது. அரசு தனது எந்தவொரு முடிவிலிருந்தும் பின்வாங்கினால் ஒரு அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதாக மாறாது என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது, சட்டங்களை திரும்பப் பெறுவது அல்லது சிலவற்றிற்காக வருந்துவது தலைவர்களின் அந்தஸ்தை உயர்த்துகிறது.

வரவிருக்கும் நாள்களில் நாங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு அழுத்தத்தை உருவாக்கி விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம்" என்றார்.

இதையும் படிங்க: வரலாற்றிலேயே மிக மோசமான, ஆணவம் கொண்ட மத்திய அரசு: சோனியா காந்தி தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.