ETV Bharat / bharat

பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும்படி கணவர் வற்புறுத்தியதாக மனைவி புகார்

author img

By

Published : Oct 17, 2022, 3:28 PM IST

'மனைவி மாற்று' முறையில் பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும்படி கணவர் வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் கடுமையாக தாக்கியதாகவும் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மனைவி புகார்
மனைவி புகார்

போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில், பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும்படி தனது கணவர் வற்புறுத்தியதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், "எனது கணவர் ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக இருந்தார். அவர் அடிக்கடி என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். அவர் ஏராளமான பெண்களுடனும், ஆண்களுடனும் உடலுறவு கொள்ளும் பழக்கம் வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு பிகானேரில் ஹோட்டல் அறை ஒன்றில் என்னை அடைத்து வைத்துவிட்டு, எனது செல்போனை பறித்துச் சென்றார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு மிகுந்த போதையில் அறைக்கு வந்தார். மதுவும், போதைப்பொருளும் உட்கொண்டிருந்தார். போதையில் இருந்த அவர், 'மனைவி மாற்று' விளையாட்டில் பங்கேற்கும்படி என்னை வற்புறுத்தினார். அந்த விளையாட்டின்படி என்னை வேறு சில ஆண்களுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தினார். அதற்கு நான் மறுக்கவே என்னை கடுமையாக தாக்கினார். பின்னர் மீண்டும் வேறு மாதிரியான முறையில் என்னுடன் உடலுறவு கொண்டு துன்புறுத்தினார்.

இதுதொடர்பாக எனது மாமியாரிடம் பலமுறை புகார் தெரிவித்தபோது, அவர் ஒருபோதும் செவிசாய்க்கவில்லை. அதற்கு காரணம் அவர்கள் என்னிடம் 50 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டனர், நான் தரவில்லை. அதனால், மாமியாரிடம் நான் புகார் தெரிவிக்கும்போதெல்லாம் அவர் என்னை நாகரீகமற்றவள் என்று விமர்சிப்பார்.

எனது கணவர் பல மாதங்களாக என்னை அடித்து துன்புறுத்தியதால் எனது உடல்நிலை மோசமானது. பிறகு நான் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அமர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டோவில் சென்ற இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.