ETV Bharat / bharat

கர்ப்பிணியின் உடல் மயானத்தில் வைத்து உடற்கூராய்வு... வரதட்சணை கொடுமை என்று தாயார் புகார்...

author img

By

Published : Oct 12, 2022, 6:25 PM IST

சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த கர்ப்பிணியின் உடலை அவரது கணவர் வீட்டார் மயானத்தில் வைத்து சட்டவிரோதமாக உடற்கூராய்வு செய்து, எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Postmortem
Postmortem

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில், கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி கர்ப்பிணி ஒருவர் சந்தேகத்திற்கிடமான நிலையில் உயிரிழந்தார். அவரது குழந்தை இறந்தே பிறந்ததாகவும், பிரசவத்தின்போது கர்ப்பிணி இறந்ததாகவும், அவரது மாமனார் மாமியார் கூறியுள்ளனர். இந்த நிலையில், தனது மகள் மாமனார் மாமியாரின் துன்புறுத்தல் காரணமாகவே உயிரிழந்தார் என்றும், அவளது உடற்கூறாய்வு மயானத்தில் சட்டவிரோதமாக நடந்ததாகவும் உயிரிழந்த கர்ப்பிணியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், "எனது மகள் லோதிக்கும், பனாகரைச் சேர்ந்த கோபி படேலுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் ஆனதில் இருந்தே எனது மகளை அவளது புகுந்த வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி வந்தனர். லோதி இறப்பதற்கு ஒருநாள் முன்பு கூட அவளது மாமியாருடன் தகராறு ஏற்பட்டது. அதனால், எனது மகளை அவளது புகுந்த வீட்டார் துன்புறுத்தி கொலை செய்திருக்க கூடும்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் எனது மகளின் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், சட்டவிரோதமாக மயானத்தில் வைத்து உடற்கூராய்வு செய்துள்ளனர். மயானத்தில் மேளம் அடிப்பவர்களை வைத்து பிளேடால் வயிற்றை கிழித்து இறந்த குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். பிறகு தகனம் செய்துள்ளனர். இதுதொடர்பான விபரங்களை கேட்டபோதும் கூறவில்லை.

அவர்கள் மயானத்தில் எனது மகளின் வயிற்றை கிழித்த வீடியோ என்னிடம் உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்ப்பிணியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கேரள நரபலி சம்பவத்தில் அடுத்தடுத்து பகீர்... உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூரம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.