ETV Bharat / bharat

பிரதமர் மோடி பெங்களூரு வருகை

author img

By

Published : Jun 20, 2022, 11:14 AM IST

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று கர்நாடகா மாநிலம் செல்கிறார். அப்போது ரூ27,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

fasd
dweaf

கர்நாடகம்(பெங்களூரு): பிரதமர் மோடி, இன்று (ஜூன்20) கலபுரகியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு தனி விமானம் மூலம் வருகிறார். அத்தோடு கர்நாடகாவில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இஎஸ்ஐ மருத்துவமனையையும் தொடங்கி வைக்கிறார்.

இந்தியா முழுவதும் மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் முதல் வாரம் வரை பல கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி கலபுரகியில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அப்போது மோடி முன்னிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த உமேஷ்ஜாதவ் மீண்டும் பா.ஜனதாவில் சேர உள்ளார். அவர், கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள, பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து பாஜக வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். பாஜக கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு சில முக்கிய நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். குறிப்பாக,

1. பெங்களூருவில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கல்லூரியை தொடங்கி வைக்கிறார்.

2. 832 படுக்கைகள் கொண்ட பாக்சி-பார்த்தசாரதி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூளை ஆராய்ச்சி மையத்திற்கு (CBR) அடிக்கல் நாட்டுகிறார்.

3. ரயில் பயணத்தை மேம்படுத்தும் விதமாக, பெங்களூரு புறநகர் ரயில் (BSRP) திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

4. ரூ.15,700 கோடி செலவில் கட்டப்பட உள்ள பெங்களூரு புறநகர் பகுதிகள் மற்றும் செயற்கைக்கோள் நகரங்களுடன் இணைக்கும் திட்டத்தில் 148 கிமீ நீளம் கொண்ட 4 வழித்தடங்களை திறந்து வைக்கிறார்.

5. யஷ்வந்த்பூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் சுமார் ரூ.500 கோடி மற்றும் ரூ.375 கோடி செலவில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிங்க: புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப்பாதையில் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.