ETV Bharat / bharat

"பன்முகத்தை கொண்டாடும் ஒவ்வொரு நேரத்திலும் நாடாளுமன்றம் தலை நிமிர்ந்து நிற்கிறது" - பிரதமர் மோடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 12:20 PM IST

Updated : Sep 18, 2023, 12:28 PM IST

Parliament Special Session : நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். நாடாளுமன்றத்தை ஏறத்தாழ 600 பெண் எம்.பிக்கள் அலங்கரித்து பெருமை சேர்த்து உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடக்கிறது. சிறப்பு கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றத்தில் தற்போது தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி மக்கள்வையில் உரையாற்றி வருகிறார்.

மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றம் மீது மக்கள் கொண்டு உள்ள நம்பிக்கை தொடர வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்தார். கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் மீது அசைக்க முடியாதை நம்பிக்கையை மக்கள் கொண்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதிகளவிலான பெண் எம்.பிக்களின் பங்களிப்பு நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்து உள்ளதாகவும் நாடாளுமன்றத்தின் பெருமையை பெண் எம்.பிக்கள் உயர்த்தி உள்ளதாகவும் பிரதமர் கூறினார். அனைத்து சமூக அமைப்புகளில் உள்ளவர்களும் நாடாளுமன்றத்தில் உள்ளதாகவும் இதனால் நாடளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அசைக்க முடியாத சூழமை எட்டி உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கரோனா காலத்தில் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் பாதிக்காமல் பார்த்துக் கொண்டதாகவும், நம்மை வழிநடத்தியவர்களுக்கு தலை வணங்கும் வாய்ப்பு தற்போது கிடைத்து இருப்பதாக மோடி குறிப்பிட்டார். நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளதாக பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

ஏறத்தாழ 600 பெண்கள் எம்.பிக்களாக தேர்வாகி நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்து உள்ளதாகவும், இந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் போன்றது என்றும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஐந்து நாட்களுக்கு நடக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு கூட்டத் தொடரில் 8 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று ஒருநாள் மட்டும் கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கவுள்ளதாகவும் நாளை (செப். 19) முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதை முன்னிட்டு நேற்று (செப். 17) புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான ஜெகதீப் தன்கர் கொடி ஏற்றி வைத்தார்.

இதையும் படிங்க: Parliament Special Session : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று தொடக்கம்..! முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா?

Last Updated : Sep 18, 2023, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.