ETV Bharat / bharat

'புதுச்சேரியை புதுப்பிப்பார்கள் மநீம வேட்பாளர்கள்' - கமல் ஹாசன்

author img

By

Published : Mar 30, 2021, 5:18 AM IST

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் புதுச்சேரியை புதுப்பிக்கும் வல்லவர்கள் என்று தேர்தல் பரப்புரையின் போது அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கமல் ஹாசன் பரப்புரை
புதுச்சேரியில் கமல் ஹாசன் பரப்புரை

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் சத்தியமூர்த்திக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், "நான் அரசியலை தொழிலாகக் கொண்டவன் அல்ல. அதனால் எனக்கு அரசியல் தெரியாது என நினைத்து விட வேண்டாம். உங்கள் அரசியல் எனக்கு தெரியும், புரியும். ஆனால் அது வேண்டாம் என காந்திய காலத்து அரசியலுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

புதுச்சேரியில் கமல் ஹாசன் பரப்புரை
புதுச்சேரியில் கமல் ஹாசன் பரப்புரை


மேலும் பேசிய அவர், "இந்த வேட்பாளர்கள் புதுச்சேரியை புதுப்பிக்கும் வேட்பாளர்கள். எங்களை நீங்கள் பயன்படுத்த தவறினால் போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்டவைகள் தொடரும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.