ETV Bharat / bharat

ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜக: காய்களை நகர்த்தும் காங்கிரஸ்!

author img

By

Published : Aug 9, 2021, 10:54 AM IST

Updated : Aug 9, 2021, 5:29 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டிவரும் நிலையில், அதற்கு எதிர்வினை ஆற்றும்வகையில் காங்கிரஸ் காய்களை நகர்த்திவருகிறது. அதன்படி, சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் பேரணி நடத்துகிறது.

பாஜக-காங்கிரஸ்
பாஜக-காங்கிரஸ்

டெல்லி: அதிகரிக்கும் பணவீக்கம், வேலையின்மை, உழவர்களின் போராட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட காரணிகளைப் பிரதானப்படுத்தி உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் தற்போதைய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது. இத்தகவலை அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஒருவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் தொண்டர்கள் ஆகஸ்ட் 9-10இல் பேரணி நடத்துகின்றனர் என்றார். அக்கட்சியின் தலைமை இது குறித்து கூறுகையில், காங்கிரஸ் தொண்டர்கள் மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் பேரணி மேற்கொள்கின்றனர்.

ராகுலுடன் வியூகம் வகுக்கும் பிரியங்கா காந்தி
ராகுலுடன் வியூகம் வகுக்கும் பிரியங்கா காந்தி

பாஜகவே அரியணையை விட்டுவிடு!

மேலும், "இந்த பேரணியில் மாநிலத் தலைவர்கள் முதல் ஊராட்சிநிலை பொறுப்பாளர்கள் வரை வெவ்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் பங்கேற்கின்றனர். இந்த பேரணி வெற்றிபெறுவதற்காக 400-க்கும் மேற்பட்ட மூத்தத் தலைவர்கள் தங்களது பங்களிப்பைச் செலுத்துகின்றனர்.

அதேபோல், உறுதிசெய்யப்பட்ட சட்டப்பேரவை வேட்பாளர்களும் இதில் மிகத் தீவிரமாகச் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" எனவும் கட்சியின் தலைமை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 'பாஜகவே அரியணையை விட்டுவிடு' என்ற கருப்பொருளில் ஒவ்வொரு சட்டப்பேரவையின் முக்கியப் பகுதியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொண்டர்களைப் பார்த்து 'கை'யசைக்கும் பிரியங்கா காந்தியும், ராகுலும்
தொண்டர்களைப் பார்த்து 'கை'யசைக்கும் பிரியங்கா காந்தியும், ராகுலும்

உத்தரப் பிரதேசத்தின் 403 சட்டப்பேரவை உறுப்பினர்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ளனர். இந்த மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஒத்தக்கருத்துடைய கட்சிகளுடன் இணைய தயார் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

கட்டமைப்பை பலப்படுத்தும் காங்கிரஸ்

இந்நிலையில் கட்சியின் தலைமை, "காங்கிரஸ் அமைப்பு ரீதியான கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் அரசுக்கு எதிரான தெருமுனைப் போராட்டத்தை கையிலெடுக்கிறது. உத்தரப் பிரதேச காங்கிரசின் அமைப்பு உருவாக்கம் அதன் இறுதிகட்டத்தில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாக்களியுங்கள் கை சின்னத்தில் - பிரியங்கா காந்தி
வாக்களியுங்கள் கை சின்னத்தில் - பிரியங்கா காந்தி

மாநிலத்தின் 823 ஊராட்சி ஒன்றியங்களில் 25 உறுப்பினர் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 ஆயிரத்து இந்த ஊராட்சி ஒன்றியங்களில் 20 ஆயிரத்து 575 பேர் செயல்படுகின்றனர்" எனக் கூறியுள்ளது. மேலும், உத்தரப் பிரதேச காங்கிரசில் எட்டாயிரத்து 134 ஊராட்சி மன்றத் தலைவர்களை நியமிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 21 உறுப்பினர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமரின் உழவர் உதவித்தொகை ரூ.2000 இன்று விடுவிப்பு

Last Updated : Aug 9, 2021, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.