ETV Bharat / bharat

தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி: அமைச்சர் சந்திர பிரியங்கா

author img

By

Published : Dec 14, 2021, 9:35 AM IST

தமிழ்நாட்டை போல புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தரப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் பஸ்: அமைச்சர் சந்திர பிரியங்கா
பெண்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் பஸ்: அமைச்சர் சந்திர பிரியங்கா

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் மாணவிகள் மற்றும் பெண்கள் எந்தவித தயக்கமும் இன்றி வாகனங்களை ஓட்டி உரிமம் பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இந்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தேன். முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இதற்கான துவக்க விழா நடந்தது. இதனால், இது வெற்றிகரமாக நடக்கும் என உறுதியளிக்கிறேன்.

அமைச்சர் சந்திர பிரியங்கா
அமைச்சர் சந்திர பிரியங்கா

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு பெண் அமைச்சராக இருப்பதில் பெருமை அடைகின்றேன். கோவாவில் நடந்த அனைத்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் ஒரே பெண் அமைச்சராகப் பங்கேற்றுள்ளேன். மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் ஓட்டுநர் லைசென்ஸ் வழங்கப்படும், புதிதாக மத்திய அரசு மூலம் புதுச்சேரியில் 200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் பஸ்
பெண்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் பஸ்

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஐந்து மாத சம்பள நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பழைய பேருந்துகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து துறையின் வருமானத்தை படிப்படியாக உயர்த்தி லாபத்தில் இயங்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் போல் இலவச பஸ் புதுச்சேரியில்
தமிழகத்தைப் போல் இலவச பஸ் புதுச்சேரியில்

புதுச்சேரியில் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அது முழுக்க முழுக்க தமிழகத்தைப் போல் இலவச பேருந்தாக இயக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாரிதாஸ் போல சு. சுவாமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? - நீதிபதியின் அடுக்கடுக்கான கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.