ETV Bharat / bharat

நாடு முழுவதும் பால் விலை உயர்வு ஏன்?: மத்திய அரசு புது விளக்கம்

author img

By

Published : Feb 10, 2023, 6:48 PM IST

கால்நடை தீவனங்களின் விலை உயர்ந்துள்ளதால், பால் விலையும் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

புதுடெல்லி: கடந்த ஓராண்டாகவே பால் விலையை உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய பால்வளத்துறை இணையமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண், "பால் நிறுவனங்கள் சில்லறை விலையில் 75 சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. நுகர்வோர் மற்றும் விவசாயிகளிடையே சமநிலையை ஏற்படுத்துவது அவசியம்.

விவசாயிகள் பால் பண்ணையை சிறப்பாக நடத்துவதற்கு, பாலுக்கு அதிக வருமானம் கிடைக்க வேண்டும். சமீபகாலமாக, கால்நடை தீவனங்களின் விலை உயர்ந்துள்ளதால், பாலின் விலையும் உயர்ந்துள்ளது. கால்நடை தீவனங்களின் விலை குறைந்தால், பாலின் விலையும் குறையும்" எனக் கூறினார்.

கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கட்டி நோய் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் பல்யாண், "ஹிசாரில் உள்ள ஐ.சி.ஏ.ஆர் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை, 3 தனியார் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வு முடிந்த பின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.

கால்நடைகளுக்கு உருவாகும் தோல் கட்டி நோய் இந்தியாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதொடர்பான உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Goat Pox தடுப்பூசி, இதுவரை 8.49 கோடி கால்நடைகளுக்கு போடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "Cow Hug Day" வாபஸ் பெற்ற விலங்குகள் நல வாரியம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.