ETV Bharat / bharat

தேர்தல் பரப்புரைக்கு நிதி திரட்ட திண்டாடும் காங்கிரஸ்

author img

By

Published : Nov 18, 2020, 9:44 AM IST

திருவனந்தபுரம்: அடுத்த மாதம் மூன்று கட்டங்களாக நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட பரப்புரை நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு நிதியுதவி வழங்க கேரள காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) திண்டாடிவருகிறது.

கேரள காங்கிரஸ் கமிட்டி
கேரள காங்கிரஸ் கமிட்டி

கேரள மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்தது. டிசம்பர் மாதம் 3 கட்டங்களாக இத்தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேதியை அறிவித்துள்ளது.

இதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதல் கட்ட பரப்புரையை நிறைவு செய்துள்ளன. மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபடுவதற்கான நிதி சிக்கலில் கேரள காங்கிரஸ் கமிட்டி திண்டாடி வருகிறது. இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்க 100 ரூபாய், 1000 ரூபாய் கூப்பன்களை வார்டு கமிட்டிகளில் ஒப்படைத்து நிதி திரட்ட அறிவுறுத்தியுள்ளது. மாநகராட்சி அளவிலான வார்டு கமிட்டிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கூப்பன்கள் வழங்கப்படும்.

இந்தக் கூப்பன்களின் மூலம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், உள்ளூர் மக்கள் என நிதியுதவி செய்ய விருப்பமுள்ளவர்களிடம் சேகரிக்கவேண்டும். நிதியைத் திரட்டுவதும், பயனுள்ள வகையில் வேட்பாளர்களுக்கு நிதியைக் கொடுப்பதும் ஒவ்வொரு வார்டு கமிட்டியின் பொறுப்பு.

தற்போது காங்கிரஸ் வார்டு கமிட்டி கூப்பன்கள் மூலம் சேகரிக்கும் நிதியின் கணக்கு வழக்குகளை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தேர்தலுக்கு பின்னர் தெரிவிக்கும்.

பொதுவாகவே மக்களவை, மாநிலங்களவை தேர்தலுக்கு மட்டும்தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிதி ஒதுக்கும் என தெரிவித்த கேரள காங்கிரஸ் கமிட்டி, ’சில சமயங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் நிதி ஒதுக்குவதில்லை’ எனக் குறிப்பிட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஐஎம்), பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மாநிலத் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு அனைத்து விதமான உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமை அக்கட்சி வேட்பாளர்களுக்கு நிதி திரட்ட போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போலி ராணுவ சீருடைகள் அணிந்து சுற்றித்திரிந்த 11 இளைஞர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.