ETV Bharat / bharat

கேரளாவில் காய்ச்சல் கொடூரம்... 39 பேர் பலி.. 15 ஆயிரம் பேர் பாதிப்பு!

author img

By

Published : Jun 29, 2023, 8:42 PM IST

கேரளாவில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சலுக்கு 39 பேர் உயிரிழந்து உள்ளதாக மாநில சுகாதரத் துறை தெரிவித்து உள்ளது.

Kerala
Kerala

திருவனந்தபுரம் : கேரளாவின் பரவும் வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்து உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் பாதிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 27ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 12 ஆயிரத்து 776 பேர் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

காசர்கோடு மாவட்டம் செம்மநாட் பகுதியைச் சேர்ந்த அஸ்வதி என்பவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், தீவிர உடல் நலக் கோளாறால் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதன் மூலம் மாநிலத்தில் காயச்சல் பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்து உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது. காய்ச்சல் காரணமாக 254 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக 138 பேரும், எலிக் காய்ச்சல் மற்றும் H1N1 வைரஸ் காரணமாகவும் பொது மக்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த ஒரு நாளில் மட்டும் 4 வயது குழந்தை உள்பட 5 பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்ரீத் பண்டிகை காரணமாக காய்ச்சல் பாதிப்புகள் குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிடாத நிலையில், நாளை (ஜூன். 3) மொத்த அறிக்கையை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டிய நிலையில், டெங்கு இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை உஷார் நிலையில் உள்ளது. டெங்கு, சிக்கன்குனியா, எச்1என்1, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் மாநிலத்தில் இதுவரை பதிவாகி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், மாநிலத்தில் நிலைமையை சமாளிக்க, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் கிளினிக்குகள், ஓஆர்எஸ் கார்னர் உள்ளிட்ட வசதிகளை சுகாதாரத்துறை இயக்குவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் கேரள எல்லையோர கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : பிரதமர் மோடியா - ராகுல் காந்தியா... மக்களே தீர்மானிப்பார்கள் - அமித் ஷா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.