ETV Bharat / bharat

கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

author img

By

Published : Apr 7, 2021, 1:09 PM IST

பெங்களூரு: 6ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்காததைக் கண்டித்து கர்நாடக மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள் காலவரையின்றி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.

Karnataka transportation staffs strike updates  கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்  கர்நாடக பஸ் ஸ்ட்ரைக்  கர்நாடகா போக்குவரத்து கழக ஊழியர்கள்  வேலை நிறுத்தப் போராட்டம்
Karnataka Bus Strike

கர்நாடக மாநில போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC), கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் (KSRTC), வடமேற்கு கர்நாடக போக்குவரத்துக் கழகம் (NWKRTC), வடகிழக்கு கர்நாடக போக்குவரத்துக் கழகத்தின் (NEKRTC) தொழிலாளர்கள், மாநில அரசு 6 வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியத்தை வழங்கவில்லை எனக் கூறி இன்று (ஏப். 7) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து உடுப்பி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் குய்லாடி சுரேஷ் கூறுகையில், "பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கிலும், மாநில அரசின் கோரிக்கைபடி, கர்நாடக மாநிலம் முழுவதும் 32 ஆயிரம் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்"என்றார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள்

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நிலையங்களில் காவல் துறையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கார், டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: கர்நாடக அரசுப் பேருந்து மோதி விபத்து: ஆடு மேய்ப்பவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.