ETV Bharat / bharat

வீடு தேடி வந்த ரூ. 85,000... கிளியால் அடித்த யோகம்...

author img

By

Published : Jul 23, 2022, 10:05 PM IST

கர்நாடகாவில் காணமல்போன ஆப்பிரிக்க சாம்பல் கிளியை கண்டுபிடித்து கொடுத்தவருக்கு 85 ஆயிரம் ரூபாயை உரிமையாளர் பரிசாக வழங்கியுள்ளார்.

thousand
thousand

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகுருவில் வசித்து வரும் அர்ஜூன் என்பவர், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாம்பல் நிறம் கொண்ட இரண்டு கிளிகளை வளர்த்து வந்தார். இதில் ஒரு கிளி கடந்த வாரம் காணாமல் போனது. இந்த கிளியின் பெயர் "ருஸ்தாமா" என்னும் இதை கண்டுபிடித்து தருவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாக அர்ஜூன் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக போஸ்டர்களையும் ஒட்டி கிளியை தேடினார். இதுதொடர்பான செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியானது.

இந்த நிலையில், துமகுரு அருகே உள்ள பந்தேபால்யா (Bandepalya) என்ற பகுதியில் வசித்து வரும் ஶ்ரீநிவாஸ் என்பவர், காணாமல் போன ருஸ்தாமாவை, அதன் உரிமையாளர் அர்ஜூனிடம் ஒப்படைத்துள்ளார். தனது வீட்டிற்கு வந்த கிளியை பராமரித்து வந்ததாகவும், இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தியை பார்த்துவிட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்ததாகவும் ஶ்ரீநிவாஸ் தெரிவித்தார். கிளி கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த அர்ஜூன், ஶ்ரீநிவாசுக்கு 85 ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்கியுள்ளார். அவர் 50 ஆயிரம் ரூபாய் அறிவித்திருந்த நிலையில், கிளி கிடைத்த மகிழ்ச்சியில் கூடுதலாக பணத்தை பரிசளித்துள்ளார். ருஸ்தாமா மீண்டும் கிடைத்ததால், அர்ஜூன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க:கிளியை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு... எந்த கிளி தெரியுமா...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.