ETV Bharat / bharat

கிளியை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு... எந்த கிளி தெரியுமா...?

author img

By

Published : Jul 19, 2022, 5:15 PM IST

கர்நாடகாவில் காணாமல் போன கிளியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று உரிமையாளர் அறிவித்துள்ளார்.

family-offers-rs-50000-reward-for-those-who-find-out-the-missing-parrot-in-tumakuru
family-offers-rs-50000-reward-for-those-who-find-out-the-missing-parrot-in-tumakuru

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் துமகுருவில் காணாமல் போன ஆப்பரிக்க சாம்பல் கிளியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று உரிமையாளர் அறிவித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. துமகுருவின் ஜெயநகர் காலனியில் வசிக்கும் ஒரு குடும்பம் இந்த கிளியை வளர்த்துவந்துள்ளது. அதோடு ஆண்டுதோறும் கிளிக்கு பிறந்த நாள் விழாவையும் ஏற்பாடு செய்துவந்துள்ளது.

இந்த நிலையில் கிளி காணாமல் போனதால், நகர் முழுவதும் உரிமையாளர் குடும்பத்தார் தேடி வந்துள்ளனர். அப்படி எவ்வளவு தேடியும் கிளி கிடைக்காததால், அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று உரிமையாளர் சார்பில் போஸ்டர் அடிக்கப்பட்டும், பேனர் வைக்கப்பட்டும் வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் இரவு பகலாக தேடி கிளியை தேடி வருகின்றனர்.

அறிவிப்பு
அறிவிப்பு

ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மத்திய ஆபிரிக்காவின் மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை. இவை ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பரவியுள்ளன. கிளி வகைகளில் மிகப்பெரியது. வெள்ளி இறகுகள், ஒரு வெள்ளை முகம், சிவப்பு நிற வால் கொண்டுள்ளது. மற்ற கிளி இனங்களை விட இந்த கிளிகள் பிரகாசமான இறகுகளை கொண்டுள்ளன. குறிப்பாக 5 வயது குழந்தைக்கு சமமான அறிவாற்றல் இவைகளுக்கு இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

இதையும் படிங்க: அமர்நீதி நாயனார் குருபூஜைக்கு வந்த கிளி: ஆச்சரியமாக பார்த்த பக்தர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.