ETV Bharat / bharat

"ஒரு கிளிக்கில் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000"- ராகுல் காந்தி பெருமிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 6:42 PM IST

Gruha Lakshmi scheme: கர்நாடக மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் கிரஹலட்சுமி திட்டம் இன்று தொடங்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சி ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை செய்து காண்பிக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Karnataka
Karnataka

பெங்களூரு (கர்நாடகா): கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பொறுப்பேற்றனர். காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்தது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உரிமைத் தொகை, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதம் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் - டிப்ளமா ப‌டித்தவர்களுக்கு 1,500 ரூபாய் உதவித் தொகை ஆகிய ஐந்து வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.

  • ವೈಯಕ್ತಿಕ ಆಸೆ, ಆಕಾಂಕ್ಷೆ, ಅವಶ್ಯಕತೆಗಳನ್ನು ತ್ಯಾಗಮಾಡಿ ಕುಟುಂಬಕ್ಕಾಗಿ ತಮ್ಮ ಬದುಕನ್ನೇ ಸಮರ್ಪಿಸಿಕೊಂಡಿರುವ ನಾಡಿನ ಕೋಟ್ಯಂತರ ತಾಯಂದಿರು ಇಂದು ನಮ್ಮ "ಗೃಹಲಕ್ಷ್ಮಿ" ಯೋಜನೆಯಿಂದ ಸ್ವತಂತ್ರ, ಸ್ವಾವಲಂಬಿ ಬದುಕಿಗೆ ಪಾದಾರ್ಪಣೆ‌ ಮಾಡಲಿದ್ದಾರೆ.

    ನಮ್ಮ ಸರ್ಕಾರ ರಾಜ್ಯದ ಪ್ರತಿಯೊಬ್ಬ ಮನೆ ಯಜಮಾನಿಯ ಬ್ಯಾಂಕ್ ಖಾತೆಗೆ 2000 ರೂಪಾಯಿಗಳನ್ನು… pic.twitter.com/keyQVWP5ow

    — Siddaramaiah (@siddaramaiah) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்படி, ஐந்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்தை வழங்கும் 'சக்தி திட்டம்' கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அதேபோல், மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக அரசு வழங்கிய ஐந்து வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் கிரஹலட்சுமி திட்டம் (Gruha Lakshmi scheme) இன்று (ஆகஸ்ட் 30) தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க விழா மைசூரில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்பி ராகுல்காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் பயனாளிகளான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கிற்கு உரிமைத் தொகையை ராகுல்காந்தி ஆன்லைன் வாயிலாக அனுப்பினார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, "கர்நாடகாவில் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் ஐந்து முக்கிய வாக்குறுதிகளை வழங்கியது. அவை தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

வாக்குறுதி கொடுத்தால் அதை செய்து காண்பிப்போம் என்று கூறினோம். அதன்படி, இன்று ஒரு கிளிக்கில் கோடிக்கணக்கான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக 2,000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே சக்தி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என கூறினார்.

இந்த உரிமைத் தொகை திட்டம் மூலம் சுமார் 1.1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக இந்த நிதியாண்டில் 17,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Rahul Gandhi: "சீனாவின் சர்ச்சைக்குரிய வரைபடம் பற்றி பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்" - ராகுல்காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.