ETV Bharat / bharat

வெள்ளி கிரக ஆய்வுகள் குறித்த படிப்புகளுக்காக இஸ்ரோ முன்முயற்சி - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

author img

By

Published : Dec 14, 2022, 4:47 PM IST

வெள்ளி கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்புவதற்கான வாய்ப்புகள் மற்றும் வளிமண்டலம் குறித்த படிப்புகளுக்காக இஸ்ரோ முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

வெள்ளி கிரக ஆய்வுகள் குறித்த படிப்புகளுக்காக இஸ்ரோ முன்முயற்சி
வெள்ளி கிரக ஆய்வுகள் குறித்த படிப்புகளுக்காக இஸ்ரோ முன்முயற்சி

டெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு மையம், வெள்ளி கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள சுக்ராயன் என்ற செயற்கை கோளை உருவாக்கிவருகிறது. இந்த செயற்கை கோள் வரும் ஜூன் மாதம், விண்ணில் ஏவப்பட உள்ளது. இத்துடன் ஸ்வீடன், பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகளின் கருவிகளும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக அனுப்புகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று (டிசம்பர் 14) மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவிஅறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், வெள்ளி கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்புவதற்கான வாய்ப்புகள் குறித்த படிப்புகளுக்காக இஸ்ரோ முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதோபோல பூமியின் வளிமண்டலம் குறித்த படிப்புகளுக்கும் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு முன்முயற்சிகளும் பூமி மற்றும் சூரிய மண்டலத்தின் வளிமண்டல வேதியியல், இயக்கவியல், ஆற்றல் சமநிலையை குறித்த கருத்தியல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் வாய்ப்புகள் பரிசீலிக்கப்பட்டுவருகிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு:இந்தியாவை யாராலும் கைப்பற்ற முடியாது - அமித்ஷா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.