ETV Bharat / bharat

இஸ்ரோ 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது - ஜிதேந்திர சிங்

author img

By

Published : Dec 16, 2022, 10:15 AM IST

இஸ்ரோ 19 நாடுகளின் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ
இஸ்ரோ

டெல்லி: நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று (டிசம்பர் 15) மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 19 நாடுகளின் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

ஜனவரி 2018ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2022ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, கொலம்பியா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லித்துவேனியா, லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, கொரியா, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் 177 வெளிநாட்டு செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி-எம்கே3 செலுத்துவாகனம் மூலம் வர்த்தக ரீதியாக இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

இந்த 177 வெளிநாட்டு செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டதன் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச்செலாவணியாகக் கிடைத்துள்ளது. விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு உருவாக்கப்பட்ட இன்-ஸ்பேஸ் டிஜிட்டல் தளம் வாயிலாக 111 விண்வெளி – ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. விண்வெளி நடவடிக்கைகளை வலுப்படுத்தி அதனை மேம்படச் செய்வதற்காக கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.