ETV Bharat / bharat

சந்திரயான் 3 வினாடி வினா: மக்களுக்கு இஸ்ரோ தலைவர் அழைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 6:48 PM IST

Chandrayaan 3 Maha Quiz: நாட்டின் வெற்றிகரமான நிலவுப் பயணத்தை கொண்டாடுவதையும், விண்வெளி சாதனைகளை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அதிகப்படுத்துவதையும் இலக்காக கொண்டு சந்திரயான் 3 மகா வினாடி வினா நடத்தப்படுகிறது. இதில் மக்களை பங்கேற்குமாறு இஸ்ரோ தலைவர் எஸ் சோமனாத் அழைப்பு விடுத்துள்ளார்.

சந்திரயான் 3 மகா வினாடி வினா: மக்களுக்கு இஸ்ரோ தலைவர் அழைப்பு!
சந்திரயான் 3 மகா வினாடி வினா: மக்களுக்கு இஸ்ரோ தலைவர் அழைப்பு!

டெல்லி: சந்திரயான் 3 மகா வினாடி வினாவில் மக்களை பங்கேற்குமாறு இஸ்ரோ தலைவர் எஸ் சோமனாத் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஆர்வமுள்ளவர்கள் MyGov.in. எனும் அரசு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத், நாட்டின் வெற்றிகரமான சந்திரப் பயணத்தைக் கொண்டாடவும், விண்வெளி சாதனைகளைப் பற்றி அறியும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் நோக்கிலும் சந்திரயான் 3 மகா வினாடி வினா நடத்தப்படுவதாகவும் எனவும் இதில் பங்கேற்குமாறும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சந்திரயான் 3 குறித்து மாணவர்கள் மேலும் தெரிந்துகொள்ள ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்டு 10 (MCQ) கொள்குறிவகை வினாக்கள்(Multiple choice) கொண்ட சந்திரயான் 3 மகா வினாடி வினா நடத்தப்படுகிறது. இந்த 10 MCQ கேள்விகள் 5 நிமிடங்கள் அல்லது 300 வினாடிகளுக்குள் முயற்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் X தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “MyGov என்பது விண்வெளி குறித்த வினாடி வினா திட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடிய ஒரு தளம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே மறக்காமல் mygov.in ஐ லாகின் செய்து வினாடி வினா போட்டியில் பங்கேற்று எங்களை ஆதரியுங்கள், எங்களை ஊக்குவித்து உத்வேகம் பெருங்கள்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்கு ரூ.60 கோடியா! அப்படி என்ன விஷேசம்?

மேலும் விண்வெளி நிறுவனமும் தன் X தளத்தில் இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியா நிலவில் உள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் இஸ்ரோ தலைவரிடம் இருந்து ஒரு சிறப்பு செய்தி. பிரத்தியேகமாக MyGov இல் நடத்தப்படும் சந்திரயான் 3 மகா வினாடி வினாவில் பங்கேற்கவும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரன் தரையிறக்கத்தை ஒன்றாகக் கொண்டாடுவோம். http://mygov.in/chandrayaan3/ எனும் தளத்தைப் பார்வையிடவும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

MyGov என்பது நாட்டின் ஆட்சி மற்றும் வளர்ச்சிக்கு இந்திய மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஆர்வமாக செயல்பட உருவாக்கப்பட்ட தளமாகும். சந்திரயான் 3 மகா வினாடி வினாவில் பங்கேற்பவர்கள் தனக்கென தனிப்பட்ட கணக்கை உருவாக்க வேண்டும். சிறப்பாக பங்கேற்பவர்களுக்கு ரூ 1,00,000 ரொக்கப் பரிசும், இரண்டாவது சிறப்பு பங்கேற்பாளருக்கு ரூ 75,000 மற்றும் மூன்றாவது சிறப்பு பங்கேற்பாளருக்கு ரூ 50,000 பரிசாக வழங்கப்படும்.

இதையும் படிங்க: பிரம்மோற்சவ விழா: தென்னக திருப்பதி கோயிலில் 'கோ' ரதத்தில் அருள் பாலித்த பெருமாள், பூமிதேவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.