ETV Bharat / bharat

'இந்திய அரசியலமைப்பு கொள்ளையடிக்க உதவுகிறது' - கேரள அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!

author img

By

Published : Jul 5, 2022, 9:19 PM IST

இந்திய அரசியலமைப்பு கொள்ளையடிக்க உதவுகிறது என கேரள மீன்வளம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் சர்ச்சை மிகுந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலைப்பு கொள்ளையடிக்க உதவுகிறது - கேரள அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
இந்திய அரசியலைப்பு கொள்ளையடிக்க உதவுகிறது - கேரள அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

ஆலப்புழா (கேரளா): கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மல்லப்பள்ளியில் நடைபெற்ற சிபிஎம் நிகழ்ச்சியில், கேரள மீன்வளம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் கலந்து கொண்டார். இதில் பேசிய அமைச்சர் சஜி செரியன், “இந்திய அரசியலமைப்பு பொதுமக்களை கொள்ளையடிக்க உதவுகிறது.

இந்திய அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பின்மை ஜனநாயகத்தை விவரித்தது போல் தளர்வாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொழிலாளர்களை சுரண்ட உதவியது. மேலும், அது நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை.

ஆங்கிலேயர்களால் தயாரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தை இந்தியர்கள் எழுதிக் கொடுத்தனர். அதுதான் கடந்த 75 ஆண்டுகளாக இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் போராட்டங்களைக்கூட அங்கீகரிக்காத நாடு இந்தியா. அதற்குக் காரணம் இந்திய அரசியல் சாசனம்.

தொழிலாளர்களின் சுரண்டலுக்கு உடன்பட்ட அரசியலமைப்பு, அம்பானி, அதானியின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம். இப்படிப்பட்ட தொழிலதிபர்களுக்கு அரசியல் சாசனம் அளித்துள்ள பாதுகாப்புக் குறித்து, எத்தனை பேர் அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடியும்? நீதிமன்றமும் பாராளுமன்றமும் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக இருக்கிறது.

இப்படிப்பட்ட பணக்கார தொழிலதிபர்களுக்கு ஆதரவாக மோடி அரசின் முடிவுகளும் நடவடிக்கைகளும், அரசியல் சாசனம் அவர்களிடம் இருக்கிறது என்பதற்கு சாட்சி. தொழிலாளர்களால் கண்ணியமான ஊதியம் கோர முடியாது. நீதிமன்றத்தை அணுகினாலும், முடிவு பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்” எனப் பேசினார்.

இவ்வாறு இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி சர்ச்சை மிகுந்த கருத்துகளைப் பேசியதால், அமைச்சர் சஜி செரியனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 2,500 பள்ளிகள் மரத்தடியில் இயங்குகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.