ETV Bharat / bharat

Ind Vs SA: தென் ஆப்பிரிக்காவுக்கு 202 ரன்கள் வெற்றி இலக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 10:23 PM IST

India Vs South Africa 3rd T20: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஜோகன்னஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் இன்னிங்சை யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் தொடங்கினர். இந்த ஆட்டத்திலும் பெரிய அளவில் சோபிக்கத் தவறிய சுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா பெரிய அளவில் சோபிக்கவில்லை டக் அவுட்டாகி வெளியேறினார். இதனிடையே மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தியது.

அபாரமாக விளையாடிய யுஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிங் சிங் 14 ரன்கள் மட்டும் எடுத்து நடையை கட்டினார். ஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார்.

அபாரமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் தனது நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்த கையோடு சூர்யகுமார் யாதவ் (100 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.

அபாரமாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசி அணி நல்ல ஸ்கோரை எடுத்த பெரிதும் உதவிகரமாக இருந்தார். தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை கேசவ் மகராஜ், லிசார்ட் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நண்ட்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது.

இதையும் படிங்க : Ind vs SA: டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.