ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா நிலவரம்; 1,27,952 புதிய தொற்றுகள்!

author img

By

Published : Feb 5, 2022, 11:46 AM IST

நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 952 பேருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா நிலவரம்; 1,27,952 புதிய தொற்றுகள்!
இந்தியாவில் கரோனா நிலவரம்; 1,27,952 புதிய தொற்றுகள்!

டெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 952 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவர செய்திக் குறிப்பில், “நாட்டில் கரோனா தொற்று விகிதம் 14 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,059 பேர் இறந்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

வெள்ளிக்கிழமை (பிப்.4) நிலவரப்படி, நாட்டின் மொத்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 394 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. 1,072 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன.

நாட்டிலேயே அதிக இறப்புகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவாகியுள்ளன. அங்கு, 1 லட்சத்து 42 ஆயிரத்து 859 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து கேரளா (56,701), கர்நாடகா (39,197), தமிழ்நாடு (37,666), டெல்லி (25,932) மற்றும் உத்தரப் பிரதேசம் (23,277) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.

இதையும் படிங்க:Tremors Felt in Jammu: ஜம்மு காஷ்மீர், நொய்டாவில் நிலஅதிர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.