ETV Bharat / bharat

Ind VS NZ 3rd T20I : டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்!

author img

By

Published : Feb 1, 2023, 7:29 PM IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

கிரிக்கெட்
கிரிக்கெட்

அகமதாபாத்: மிட்செல் சான்டனர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.

ஜனவரி 27ஆம் தேதி ஜார்க்கண்டில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தும், லக்னோவில் 29ஆம் தேதி நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தன.

தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று(பிப்.1) நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் இந்திய அணி எடுத்து உள்ளது.

தொடக்க வீரர் இஷான் கிஷன் 1 ரன்னில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறிய நிலையில், சுப்மான் கில் 15 ரன்னும், ராகுல் திரிபாதி 7 ரன்கள் எடுத்தும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு அமைச்சகத்துக்கு கூடுதலாக ரூ.700 கோடி நிதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.