ETV Bharat / bharat

நாட்டில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Jan 8, 2022, 12:06 PM IST

Updated : Jan 8, 2022, 2:00 PM IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.41 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலும் பாதிப்பு உச்சம் தொட்டுவருகிறது.

ஓரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தொற்று
ஓரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தொற்று

டெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது, இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டில் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நாடு முழுக்க நேற்று வெள்ளிக்கிழமை காலை பதிவான 1.17 லட்சத்துடன் ஒப்பிடும்போது, ​​கடந்த 24 மணி நேரத்தில் 1.41 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியாவில் தினசரி கோவிட் -19 பெருந்தொற்று பாதிப்பு லட்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

குணமடைந்தோர் விவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். மேலும் 285 இறப்புகள் பதிவாகியுள்ளன. பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை கொண்டு வந்துள்ளன.

இதற்கிடையில், இந்தியாவில் ஒமைக்ரான் எண்ணிக்கை 3,071 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகமாக 876 பாதிக்கப்பட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து டெல்லியில் 513 பேருக்கும், கர்நாடகாவில் 333, மற்றும் ராஜஸ்தானில் 291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,72,169 ஐ எட்டியுள்ளது, மேலும் இது நாட்டின் மொத்த வழக்குகளில் 1.34 சதவீதமாகும். நோயிலிருந்து குண்மடைவோர் விகிதம் 97.30 சதவீதமாக உள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா முதலிடம்

மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் கர்நாடகாவில் அதிகமான கோவிட்-19 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 40,925 புதிய நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், நோய்த்தொற்று 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மும்பையில் மட்டும் 20,971 பேர் பதிவாகியுள்ளனர்.

கர்நாடகாவில் 8 ஆயிரத்து 449 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதால், புதியதாக தொற்று பாதிக்கப்படுவோர் வீதம் 68 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. மாநில தலைநகர் பெங்களூருவில் மட்டும் 6,812 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

நேற்று (ஜன.7) டெல்லியில் ஒரே நாளில் 17,335 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டனர். மே 8 முதல் ஒரே நாளில் அதிகம் பேர் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை. அந்த வகையில், பாதிக்கப்படுவோர் விகிதம் 17.73 சதவீதம் உயர்ந்துள்ளது என சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

அதிக பேருக்கு பரிசோதனை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,29,948 கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதுவரை இந்தியாவில் மொத்தமாக 68,84,70,959 சோதனைகளை நடத்தியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தரவுகள் தெரிவிக்கின்றன.

கரோனா தொற்று அதிகரிப்பதால் மூன்றாம் அலை தொடங்கியதாக கருதப்படுகிறது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருப்பதாக அனைத்து மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க:COVID-19 Tamil Nadu: தமிழ்நாட்டில் புதிதாக 8,981 பேருக்கு கரோனா

Last Updated : Jan 8, 2022, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.