ETV Bharat / bharat

ஐந்தாண்டுகளில் 285 வெளிநாட்டு செயற்கைகோள்களை செலுத்திய இந்தியா

author img

By

Published : Feb 10, 2022, 1:32 PM IST

2016-21 காலக்கட்டத்தில் 29 நாடுகளைச் சேர்ந்த 285 செயற்கைக்கோள்களை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

satellite
satellite

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் இந்திய விண்வெளித்துறை குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

அதில், கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களை அனுப்பிய புள்ளிவிவரங்களை தெரிவித்துள்ளது. அதன்படி, 2016-21 காலக்கட்டத்தில் 29 நாடுகளைச் சேர்ந்த 285 செயற்கைக்கோள்களை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

இந்த 285 செயற்கைக்கோள்களில் 222 அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவை. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக லித்துவேனியாவைச் சேர்ந்த ஏழு செயற்கைக்கோள்களை இந்தியா ஐந்தாண்டுகளில் செலுத்தியுள்ளது.

மேலும் இந்த ஐந்தாண்டுகளில் இந்தியா மொத்தம் 329 விண்கலங்களை செலுத்தியுள்ளதாகவும், அவற்றில் 45 விண்கலங்கள் உள்நாட்டின் பயன்பாட்டிற்கு எனவும் அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Hijab Row: ஹிஜாப் வழக்கு மூன்று நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.