ETV Bharat / bharat

கரோனா நிலவரம்- 3,993 பேர் பாதிப்பு

author img

By

Published : Mar 8, 2022, 1:23 PM IST

இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 3,993 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய கரோனா நிலவரம்
இன்றைய கரோனா நிலவரம்

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3,993 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் 49 ஆயிரத்து 948 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி தொற்று விகிதம் 0.46%ஆகவும், வாரந்திர தொற்று விகிதம் 0.68%ஆகவும் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 8,055 பேர் கரோனவாலிருந்து குணமடைந்துள்ளனர். இது வரை நாட்டில் ஒட்டு மொத்தமாக 4 கோடியே 24 லட்சத்து 6ஆயிரத்து 150 பேர் குணமாகியுள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் விகிதம் 96.98% ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 108 பேர் கரோனவால் உயிரிழந்துள்ளனர், மேலும் 8 லடசத்து 73 ஆயிரத்து 395 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 179.13 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உக்ரைன் ராணுவத்தில் கோவை இளைஞர்... உளவுத்துறை விசாரணை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.