ETV Bharat / bharat

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்ய வாக்கெடுப்பு - இந்தியா புறக்கணிப்பு

author img

By

Published : Apr 7, 2022, 11:08 PM IST

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்ய அமெரிக்கா முன்வைத்த வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வியாழன் அன்று வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் கவுன்சில்
ஐநா மனித உரிமைகள் கவுன்சில்

ஐக்கிய நாடுகள் சபை: உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பொதுச்சபை மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் ஆகியவற்றில் நடைமுறை வாக்குகள் மற்றும் வரைவு தீர்மானங்களில் இந்தியா எட்டு முறை வாக்களிக்கவில்லை.

இந்தியா, கடந்த செவ்வாயன்று உக்ரேனிய நகரமான புச்சாவில் பொதுமக்கள் படுகொலைகள் பற்றிய "ஆழ்ந்த கவலையளிக்கும்" அறிக்கைகளை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்தது மற்றும் ஒரு சுயாதீன விசாரணைக்கான அழைப்பை ஆதரித்தது.

உக்ரைனில் நடந்த கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், "உக்ரைனில் நடந்த கூட்டத்தில், கவுன்சில் கடைசியாக விவாதித்ததில் இருந்து, அங்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. பாதுகாப்பு நிலையும், அதன் மனிதாபிமான விளைவுகளும் மோசமடைந்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்கிழமை முதல்முறையாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உரையாற்றினார்.

ஆன்டிகுவா மற்றும் பார்புடா, கனடா, கொலம்பியா, கோஸ்டாரிகா, ஜார்ஜியா, ஜப்பான், லைபீரியா, மால்டோவா குடியரசு, உக்ரைன், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஆகியோரின் வேண்டுகோளுக்குப் பிறகு பொதுச் சபை தனது அவசரகால சிறப்பு அமர்வை மீண்டும் தொடங்கியது. மனித உரிமைகள் கவுன்சில் 47 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையில் ரஷ்ய கூட்டமைப்பின் உறுப்பினர் உரிமைகளை இடைநிறுத்துதல் என்ற தலைப்பில் வரைவுத் தீர்மானம் மார்ச் 4, 2022இல் மனித உரிமைகள் கவுன்சில் மூலம் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீண்டும் ஐ.நா.சபையில் விவாதிக்கப்பட்டது.

உக்ரைனில் நடந்து வரும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி, குறிப்பாக மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மற்றும் ரஷ்யாவின் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் உட்பட கடுமையான கவலையை இந்த வரைவு தீர்மானம் வெளிப்படுத்துகிறது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் மற்றும் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிச்செல் பச்செலெட் ஆகியோரின் அறிக்கைகளில் வலுவான கவலை வெளிப்பாடுகளை இது அங்கீகரிக்கிறது.

உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் இந்த வாரம் ருமேனியாவின் புக்கரெஸ்டில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார், அதில், அமெரிக்கா, உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா.வின் மற்ற நாடுகளின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்யப்போகிறது என்று சொல்லியிருந்தார்.

அதை வலியுறுத்தும் வகையில் அவர் இன்று, ‘மனித உரிமைகள் பற்றிய நியாயமான அக்கறை இருப்பதாகத் தெரிவிக்கும் வகையில், கவுன்சிலில் தங்கள் பங்கை ஒரு பிரசாரக் கருவியாகப் பயன்படுத்த ரஷ்யாவை அனுமதிக்கக் கூடாது. அதனால்தான் ஐ.நா. பொதுச் சபை அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டிய நேரம் இது என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார், அமெரிக்க தூதர். இதற்கான வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்காமல் புறக்கணித்துள்ளது.

இதையும் படிங்க: ஆண்டுகள் கடந்து கிடைத்த நீதி - 'அத்தியூர் விஜயா' நூலாசிரியர் உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.