ETV Bharat / bharat

Parliament Adjourned: அதானி விவகாரம் - நாடாளுமன்றத்தை மீண்டும் முடக்கிய எதிர்க் கட்சிகள்!

author img

By

Published : Mar 20, 2023, 1:33 PM IST

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்தக் கோரி எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

Parliament Adjourned
Parliament Adjourned

டெல்லி: நடப்பு நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனிடையே அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பெர்க், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.

இந்த ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தன. அதானி குழும விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி இரு அவைகளையும் முடக்கின. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அம்ர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டாவது கட்ட அமர்வு தொடங்கி இரண்டாவது வாரத்தை எட்டிய நிலையில், நாடாளுமன்றம் தொடர் முடக்கத்தையே கண்டு வருகிறது. இந்திய ஜனநாயகம் குறித்த சர்ச்சை கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆளும் பாஜக கூட்டணி கட்சியினரும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி எதிர்க் கட்சிகளும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (மார்ச். 20) வழக்கம் போல் நாடாளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி எதிர்க் கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 2 மணி வரைக்கு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

முன்னதாக எதிர்க் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்த ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் வானுயர்ந்த இந்திய தேசியக் கொடி - வைரலாகும் புகைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.