ETV Bharat / bharat

3ஆம் அலை ஏற்படுமா? - பெருந்தொற்று வல்லுநர் விளக்கம்

author img

By

Published : Sep 18, 2021, 9:08 AM IST

புதிய வகை கோவிட்-19 தொற்று உருவாகாத வரை இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்பு பெரிய அளவில் இருக்காது எனப் பெருந்தொற்று வல்லுநர் ககன்தீப் கங்க் தெரிவித்துள்ளார்.

Gagandeep Kang
Gagandeep Kang

இந்தியாவின் முன்னணி பெருந்தொற்று வல்லுநரும் பேராசிரியருமான ககன்தீப் கங்க் கருத்தரங்கு ஒன்றில் காணொலி வாயிலாகப் பங்கேற்றார். இந்தக் கருத்தரங்கில் இந்தியாவில் நிலவும் கோவிட்-19 தொற்று பாதிப்பு, தடுப்பூசித் திட்டம், சுகாதாரக் கட்டமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது, "இந்தியாவில் கோவிட்-19 தொற்று முழுமையாக ஓய்ந்துவிட்டதா எனக் கேட்டால் அதன் பதில் இல்லை என்றே கூற வேண்டும். எனவே, அடுத்த சில காலத்திற்கு தொற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அதேவேளை, இன்றைய சூழலில் மூன்றாம் அலை பாதிப்பு பெரிய அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தடுப்பூசித் திட்டத்தையும் தாண்டி புதிய வகை தொற்று உருவெடுத்தாலே ஒழிய மூன்றாம் அலையின் தீவிர பாதிப்பு ஏற்படுத்தாது.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை நாம் மேம்படுத்த வேண்டும். அதற்காகத் துறை சார்ந்த வல்லமையை இந்தியா வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

கோவிட்-19 தொற்றை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றும் நாட்டின் தடுப்பூசித் திட்டம் அபாரமாகச் செயல்படுகிறது எனவும் ககன்தீப் கங்க் பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய சாதனையுடன் தடுப்பூசி இலக்கை நோக்கி முன்னேறும் இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.