ETV Bharat / bharat

மனைவியை கவனிக்க முடியவில்லை - கொலை செய்து பகீர் வாக்குமூலம் அளித்த கணவர்

author img

By

Published : Dec 6, 2022, 10:05 PM IST

பெங்களூருவில் படுத்த படுக்கையாக இருந்த தனது மனைவியை கவனிக்க முடியவில்லை என கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரில் மனைவியை கவனிக்க முடியாமல் கொலை செய்த கணவர்
பெங்களூரில் மனைவியை கவனிக்க முடியாமல் கொலை செய்த கணவர்

பெங்களூரு: பெங்களூரு புறநகரில் உள்ள துரஹள்ளியில் வசிப்பவர், சங்கரப்பா (60). இவரது மனைவி சிவம்மா (50). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சங்கரப்பா ஒரு வருடமாக கட்டுமானத்தில் இருக்கும் கட்டடத்தின் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் சிவம்மா கடந்த 2 ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். அவரால் இரண்டு கால்களையும் அசைக்க முடியாத நிலையில் முழுநேர கவனிப்பு தேவைப்பட்டுள்ளது. சங்கரப்பா தனது மனைவின் அவலநிலையால் ஏமாற்றமடைந்து, ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்படைந்ததாக கூறப்படுகிறது.

ஆகையால், ஞாயிற்றுக்கிழமை(டிச.4) சங்கரப்பா தனது மனைவியை 9 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். வெளியே சென்றிருந்த இவர்களது 11 வயது மகன் திரும்பி வந்து பார்த்த போது தண்ணீர் தொட்டியில் தாய் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்த கேரேஜுக்கு விரைந்து சென்று அவர்களின் உதவியை நாடியுள்ளார். பிறகு தகவலறிந்து வந்த தலக்கட்டாபுரா காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு இன்று போலீசார் சங்கரப்பாவை கைது செய்து விசாரணை நடத்திய போது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சோசியல் மீடியாவில் காதல்... காதலியை கழுத்து அறுத்துக்கொன்ற கொடூர ஐடி பணியாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.