ETV Bharat / bharat

ஸ்ரீ நகரில் குப்கர் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

author img

By

Published : Jul 5, 2021, 10:34 AM IST

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப்பின் ஸ்ரீ நகரில் குப்கர் கூட்டணி தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் அரசியல் நகர்வுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

Gupkar Alliance
Gupkar Alliance

ஜம்மு காஷ்மீரின் முன்னணி கட்சிகள் இணைந்து "குப்கர் கூட்டணி"-ஐ 2019ஆம் ஆண்டு உருவாக்கின. காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் இந்த கூட்டணி உருவானது.

சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் காஷ்மீரில் நிலவிய இறுக்கமான அரசியல் சூழலை சீர்செய்யும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரின் முன்னணி தலைவர்களை கடந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் குப்கர் கூட்டணித் தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்த சந்திப்புக்குப் பின் முதன்முறையாக குப்கர் தலைவர்கள் நேற்று(ஜூலை 4) ஸ்ரீநகரில் சந்தித்தனர். தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் பிடிபி கட்சியின் தலைவரான மெகபூபா முஃப்தியும் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், மாநில அந்தஸ்து, தேர்தல், மாநில உரிமைகள் ஆகியவற்றை மீண்டும் பெறுவதற்கான செயல்திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இச்சந்திப்பு குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என கூட்டணியின் செய்தித்தொடர்பாளர் யூசுப் டரிகாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உலகளவில் இந்தியாவின் கௌரவம் உயர்ந்துள்ளது - ராஜ்நாத் சிங் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.