ETV Bharat / bharat

ட்ரோன் மூலம் தடுப்பூசி விநியோகமா? - ஆய்வு செய்ய ஐசிஎம்ஆர்-க்கு அனுமதி!

author img

By

Published : Apr 23, 2021, 1:26 PM IST

டெல்லி: ஆளில்லா ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ஐசிஎம்ஆர்-க்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

Govt permits ICMR
ட்ரோன்

நாடு முழுவதும் மே 1ஆம் தேதி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பூசியை ஆளில்லா பறக்கும் ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் முயற்சி குறித்து ஆலோசிக்க ஐசிஎம்ஆர்-க்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கான்பூர் ஐ.ஐ.டி-யுடன் இணைந்து ஐ.சி.எம்.ஆர் இந்த ஆய்வை மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

இதற்காக ஆளில்லா விமான அமைப்பு விதிகளில் நிபந்தனை விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கானது ஒரு வருடம் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை செல்லுபடியாகும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'ஆறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு' டெல்லி துணை முதலமைச்சர் கவலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.