ETV Bharat / bharat

இந்தியா-மத்திய கிழக்கு ஐரோப்பா இடையேயான பொருளாதார வழித்தடம்: பி.எம் மோடி தொடங்கி வைப்பு.!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 8:15 PM IST

ஜி 20 மாநாடு : இந்தியா மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கு இடையேயான பொருளாதார வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டின் இரண்டாவது அமர்வில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கு இடையேயான பொருளாதார வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று (செப். 9) இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "இன்று நாம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு முக்கியமான கூட்டாய்மையை எட்டியுள்ளோம். மனித வளர்ச்சியின் உட்கட்டமைப்பிற்கு வலுவான பிணைப்பு அடிப்படையான ஒன்று. இதற்கு இந்தியா மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு ஐரோப்பா மட்டும் இன்றி மற்றும் பல நாடுகளுடன் பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது. இந்த வலுவான பிணைப்பு முயற்சியில் முக்கியத்துவங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும். அதில் சர்வதேச விதிகள், நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல இருக்கின்றன, அவை நேர்மையுடன் கடைபிடிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தொகுதிப் பங்கீடு குறித்து பாஜகவுடன் இதுவரை எந்த விவாதமும் செய்யவில்லை: குமாரசாமி கருத்து.!

இந்தியா மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கு இடையேயான பொருளாதார வழித்தடம் தொடங்கப்பட்டது குறித்துப் பேசிய, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்தியா மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை தொடங்கி இருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என கூறினார். இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார வழித்தட பிணைப்பு வரும் காலங்களில் இரு நாடுகளுக்குமான பொருளாதார ஒருங்கிணைப்புக்கு பயணுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகள் பங்கேற்றுள்ள ஜி-20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பொருளாதாரம், மனித சக்தி, நாடுகளுக்கு இடையேயான பல்வேறு புரிந்துணர்வுகள் உள்ளிட்ட பலவற்றின் கீழ் பேச்சு வார்த்தை நடக்கிறது. இந்தியாவில் நடக்கும் இந்த 18வது ஜி 20 மாநாடு, நாட்டின் பெருமையை உலகறியச் செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த மாநாட்டை சிறப்பாக வழிநடத்த தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் அவர் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஜி20 மாநாட்டில் இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி - பிரதமர் மோடி பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.