ETV Bharat / bharat

விமானத்தில் வாக்குவாதம்: வைரலாகும் ஸ்மிருதி இரானி வீடியோ

author img

By

Published : Apr 11, 2022, 3:16 PM IST

பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மகளிரணி தலைவர் நெட்டா டி'சோசா, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் விமானத்தில் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி தற்போது வைரலாகி வருகிறது.

விமானத்தில் வாக்குவாதம்
விமானத்தில் வாக்குவாதம்

டெல்லி: இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்ற நேரத்தில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 137 நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு, மார்ச் 22ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

மார்ச் 22இல் இருந்து தொடர்ந்து 16 நாள்களில் விலை உயர்ந்துவந்த நிலையில், ஏப். 7ஆம் தேதி முதல் தற்போது வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை ஏற்றத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எரிப்பொருள்களின் விலையேற்றம் குறித்து ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடன் காங்கிரஸ் மகளிர் அணியின் தலைவர் (பொறுப்பு) நெட்டா டி'சோசா நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் விமானத்தில் டெல்லியில் இருந்து கௌகாத்தி வரை செல்ல நேர்ந்தது.

  • गुवाहाटी की फ़्लाइट में @smritiirani जी से सामना हुआ।

    रसोई गैस की लगातार बढ़ती क़ीमतों पर सुनिए उनके जवाब 👇

    महँगाई का ठीकरा,वे किन-किन चीज़ों पर फोड़ रहीं हैं !

    जनता पूछे सवाल, स्मृति जी दें टाल !
    वीडियो के अंशों में ज़रूर देखिये, मोदी सरकार की सच्चाई ! pic.twitter.com/fyV6ossGZm

    — Netta D'Souza (@dnetta) April 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அப்போது, எரிபொருள்கள் மீதான கடுமையான விலையேற்றம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, அவர் தடுப்பூசி, ரேஷன் உள்பட ஏழைகள் மீதும் கூட பழிப்போடுகிறார். இதோ, அவர் பேசியதன் சுருக்கத்தை கொஞ்சம் பாருங்கள், வெகுமக்களின் துயரத்திற்கு அவர் எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்று பாருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த காணொலியில், அமைச்சர் இரானி, நெட்டா விமானப் பயணிகளின் வழியை மறைப்பதாகக் கூச்சலிட்டார். அதற்கு, மக்கள் இதனால் பாதிப்படையவில்லை என்றும் பெட்ரோல், டீசல் விலையால்தான் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ட்விட்டரில் பகிர்ந்த இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஜேஎன்யூவில் வன்முறை... 6 மாணவர்கள் காயம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.