ETV Bharat / bharat

ஜிகா வைரஸ் - மீண்டும் ஒருவர் பாதிப்பு

author img

By

Published : Jul 22, 2021, 11:34 AM IST

கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிகாவால் பாதிப்பு
ஜிகாவால் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா 2 ஆவது அலையின் பாதிப்புகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அதற்குள் ஜிகா நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும்.

முன்னதாக 38 பேருக்கு ஜிகா தொற்று காணப்பட்ட நிலையில், நேற்று (ஜூலை 21) புதிதாக 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு தொற்று எண்ணிக்கை 41 ஆக இருந்தது.

இன்று (ஜூலை 22) மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: உருவானது புதிய புயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.