ETV Bharat / bharat

கொச்சி பல்கலைக்கழக கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி! மீட்பு பணிகள் தீவிரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 8:43 PM IST

kerala Kochi University Tech Fest stampede : கொச்சி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

Tech
Tech

கொச்சி : கேரள, கொச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த டெக் பெஸ்ட்(Tech Fest) நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, கொச்சி பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. இந்த விழாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மக்கள் திரண்டதாக கூறப்படுகிறது.

இதனால் விழாவில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் 4 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஏறத்தாழ 46 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விழாவிற்கு சென்ற பெரும்பாலனோருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ள நிலையில் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : ராஜஸ்தானில் வாக்குப்பதிவு நிறைவு! 68.50% வாக்குகள் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.