ETV Bharat / bharat

முக்கிய தளபதி உள்ளிட்ட 4 மாவோயிஸ்டுகள் விசாகப்பட்டினத்தில் சரணடைந்தனர்!

author img

By

Published : Jan 4, 2021, 9:01 PM IST

அமராவதி : நீண்ட காலமாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தளபதி பாங்கி முசிரி உள்ளிட்ட நான்கு மாவோயிஸ்டுகள் விசாகப்பட்டினம் டி.ஐ.ஜி ரங்கராவ் முன்னிலையில் சரணடைந்தனர்.

Four maoists surrendered at Visakhapatnam
முக்கிய தளபதி உள்ளிட்ட 4 மாவோயிஸ்டுகள் விசாகப்பட்டினத்தில் சரணடைந்தனர்!

ஜாமிகுடா அடுத்த சாகிரேவ் கிராமத்தைச் சேர்ந்தவர் கோர்ரா சீதா ஷைலா என்ற ஸ்வர்ணா. 2010ஆம் ஆண்டில் சிபிஐ-மாவோயிஸ்ட் கட்சியில் உறுப்பினராக கோர்ரா சீதா மீது ஒன்பது கொலை வழக்குகள், சொத்து அழிப்பு வழக்கு, மக்கள் நீதிமன்றம் அமைத்த வழக்கு, ஆறு தாக்குதல் வழக்குகள், பஞ்ச தாக்குதலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரது தலைக்கு நான்கு லட்சம் ரூபாயை வெகுமதியாக காவல் துறை அறிவித்திருந்தது.

பாங்கி முசிரி என்றழைக்கப்படும் சிட்டி பாபு. சாகிரேவ் கிராமத்தைச் சேர்ந்த இவர் 2010ஆம் ஆண்டில் மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்தார். ஆயுதப்போராட்டத்தின் முக்கிய தளபதியாக உருவெடுத்த சிட்டி பாபு மீது ஏழு வழக்குகள் உள்ளன. இவர்களுடன் சிந்தப்பள்ளி மண்டல் கோர்ரா வெங்கட ராவ், பாங்கி கோபால்ராவ் ஆகிய இருவரும் சரணடைந்தனர்.

Four maoists surrendered at Visakhapatnam
முக்கிய தளபதி உள்ளிட்ட 4 மாவோயிஸ்டுகள் விசாகப்பட்டினத்தில் சரணடைந்தனர்!

இது தொடர்பாக கருத்து தெரிவித்த டி.ஐ.ஜி ரங்கராவ், “மறைந்து வாழும் மாவோயிஸ்டுகள் தேர்ந்தெடுத்துள்ள வன்முறை பாதையைக் காட்டிலும் மக்களின் இயல்பான வாழ்க்கை ஓட்டத்தோடு இணைவதால் மட்டுமே பழங்குடி பகுதிகளில் நிலவிவரும் பிரச்னைகளை தீர்க்க முடியும்” என கூறினார்.

உடல்நலக்குறைவு காரணமாக இவர்கள் அனைவரும் கட்சியைவிட்டு வெளியே வந்துள்ளதாகவும், தொடர்ந்து மக்களைச் சந்தித்து வெகுதிரள் அரசியல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் சரணடைந்த மாவோயிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : காசியாபாத் துயரம்: ரூ.55 கோடியில் கட்டப்பட்ட தகன மேடை இடிந்து விழுந்த விவகாரத்தில் மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.