ETV Bharat / bharat

நரசிம்ம ராவ் உதவியாளர் காலமானார்!

author img

By

Published : Jun 9, 2021, 8:19 PM IST

பிவி நரசிம்ம ராவ் உதவியாளர் ராம் கண்டேகர் காலமானார்.

Ram Khandekar  Narasimha Rao  Narasimha Rao OSD  officer on duty  Ex-PM Narasimha Rao  Ex-India PM Narasimha Rao  ராம் கண்டேகர்  நரசிம்ம ராவ் உதவியாளர் காலமானார்
Ram Khandekar Narasimha Rao Narasimha Rao OSD officer on duty Ex-PM Narasimha Rao Ex-India PM Narasimha Rao ராம் கண்டேகர் நரசிம்ம ராவ் உதவியாளர் காலமானார்

நாக்பூர்: முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவிடம் சிறப்பு உதவியாளராக பணிபுரிந்தவர் ராம் கண்டேகர். 87 வயதான இவர், வயது முதிர்வு மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக காலமானார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக ஒய்.பி சவான் இருந்த போது ராம் கண்டேகர் தனிச் செயலாளராக பணிபுரிந்தார். அதன்பின்னர் 1991ஆம் ஆண்டு பிவி நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது சிறப்பு அலுவலராக பணிபுரிந்தார்.

ராம் கண்டேகர் மராத்தி மொழியில் வெளியான பல்வேறு நாளிதழ்களுக்கு கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் மகன், மருமகள் மற்றும் இரு பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கறும்பூஞ்சை தொற்றுக்கு உயிரிழந்த பாஜக முதுபெரும் தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.