ETV Bharat / bharat

திரிபுரா இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையும் கைப்பற்றியது பா.ஜ.க!

author img

By PTI

Published : Sep 8, 2023, 5:08 PM IST

Tripura bypoll result: திரிபுரா மாநிலத்திலுள்ள தன்பூர் மற்றும் போக்ஸாநகர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

End of road for communists in Tripura: BJP after bypoll victories
திரிபுராவில் நடைபெற்ற 2 தொகுதியையும் கைப்பற்றியது பா.ஜ.க

டெல்லி: இந்தியாவிலுள்ள 6 மாநிலங்களில் 7 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த செவ்வாய்கிழமை (செப்.5) நடைபெற்றது. அதன் பின்பு (செப்.8) இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியானது இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது.

திரிபுரா மாநிலத்திலுள்ள தன்பூர் மற்றும் போக்ஸாநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைதேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்று இன்று வாக்கு எண்ணும் பணிகள் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு முடிவடைந்தது. இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • BJP wins both Assembly seats in Tripura.

    BJP's Tafajjal Hossain won the Boxanagar seat, which has around 66% Muslim voters, by 30,237 votes. Hossain got 34,146 votes, while his nearest rival Mizan Hossain of the CPI(M) got just 3,909 votes.

    In Dhanpur, which has a significant…

    — Amit Malviya (@amitmalviya) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

66 சதவீத சிறுபான்மை வாக்காளர்களைக் கொண்ட போக்ஸாநகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்து தஃபஜ்ஜால் ஹொசைன் 34,146 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மிசான் ஹொசைன் 3,909 வாக்குகள் பெற்றார். இதனால் 30,237 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் தஃபஜ்ஜால் ஹொசைன் வெற்றி பெற்றுள்ளார்.

இதே போல் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தன்பூர் தொகுதியில் பா.ஜ.கவை சேர்ந்த பிந்து தேப்நாத் 30,017 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கவுசிக் சந்தா 11,146 வாக்குகள் பெற்றார். இதனால் 18,872 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் பிந்து தேப்நாத் வெற்றி பெற்றுள்ளார். என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளன.

திரிபுரா மாநிலம் செபஹிஜாலா மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் ஆளும் பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டன. மேலும் இந்த இடைத்தேர்தலில் திப்ரா மோதா மற்றும் காங்கிரஸ் கட்சி், வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரளாவில் ஆளுங்கட்சியை வீழ்த்திய காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி.. கோட்டயத்தில் கொண்டாட்டம்!

திரிபுரா மாநிலத்திற்கான இரண்டு இடைத்தேர்தலிலும் வாக்குப்பதிவு செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. இரண்டு தொகுதிகளிலும் சராசரியான 86.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் இன்று பலத்த பாதுகாப்புகளுடன் சோனமுரா பெண்கள் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவடைந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாகவும் அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருந்ததாக குற்றம் சாட்டி தேர்தல் எண்ணிக்கையை புறக்கணித்துள்ளனர்.

போக்ஸா நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சம்சுல் ஹக் உயிரிழந்ததாலும், தன்பூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை மத்திய அமைச்சர் பிரதிமா பூமிக் ராஜினாமா செய்ததாலும் இந்த இரண்டு தொகுதிகளிலும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது.

பா.ஜ.கவின் இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றியை தொடர்ந்து 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டசபையில் பா.ஜ.க 33 சட்டமன்ற உறுப்பினர்களையும், பா.ஜ.க கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரும், திப்ரா மோதா 13 சட்டமன்ற உறுப்பினர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 சட்டமன்ற உறுப்பினர்களையும் மற்றும் காங்கிரஸ் 3 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்தது. தற்போது இந்த வெற்றி கம்யூனிஸ்ட் பாதையின் முடிவு என பா.ஜ.க தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பாளர் அமித் மால்வியா தனது X பதிவில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: INDIA vs BJP: 6 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முந்துவது யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.