ETV Bharat / bharat

கேரளாவில் ஆளுங்கட்சியை வீழ்த்திய காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி.. கோட்டயத்தில் கொண்டாட்டம்!

author img

By PTI

Published : Sep 8, 2023, 12:45 PM IST

Updated : Sep 8, 2023, 4:34 PM IST

Kerala Puthuppally by poll result: கேரளா மாநிலம், கோட்டயம் பகுதியிலுள்ள புதுப்பள்ளி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சி வேட்பாளர் சாண்டி உம்மன் 37,719 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

puthuppally-bypoll-udfs-chandy-oommen-leads-as-counting-underway
புதுப்பள்ளி இடைத்தேர்தல் தொடர்ந்து முன்னிலையில் காங்கிரஸ் UDF வேட்பாளர் சாண்டி

கேரளா (புதுப்பள்ளி): கேரளா மாநிலம், கோட்டயம் பகுதியிலுள்ள புதுப்பள்ளி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 6 மாநிலங்களில் 7 சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.5) நடைபெற்றது. 7 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கியது.

கேரளா மாநிலம், கோட்டயம் பகுதியிலுள்ள புதுப்பள்ளி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது 13 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணியானது நடைபெற்றது. இந்த நிலையில் காங்கிரஸ் UDF கட்சி வேட்பாளர் சாண்டி உம்மன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். இவர் மறைந்து காங்கிரஸ் UDF சட்டமன்ற உறுப்பினர் உம்மன் சாண்டி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 13 சுற்று வாக்கு எண்ணும் பணிகள் முடிவடைந்து சாண்டி உம்மன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 47 கட்சித் தலைவர்களுக்கு கவிதா கடிதம்!

கேரளா மாநிலம், கோட்டயம் பகுதியிலுள்ள புதுப்பள்ளி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. 13 சுற்றுகள் வாக்கு எண்ணும் பணியானது நடைபெற்றது முடிவில் காங்கிரஸ் UDF வேட்பாளர் சாண்டி உம்மன் 80,144 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெய்க் சி தாமஸ் 42,425 வாக்குகள் பெற்றிருந்தார். பா.ஜ.க வேட்பாளர் லிஜின் லால் 6,558 வாக்குகள் பெற்றிருந்தார். மேலும் நோட்டாவில் 400 வாக்குள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து காங்கிரஸ் UDF வேட்பாளர் சாண்டி உம்மன் 37,719 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன். 1970 முதல் 2023 வரை கேரளா மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினராக உம்மன் சாண்டி இருந்துள்ளார். மேலும் 2004 முதல் 2006 வரையிலும் 2011 முதல் 2016 வரையிலும் கேரளா மாநிலத்தின் முதலமைச்சராக உம்மன் சாண்டி இருந்துள்ளார். 2006 முதல் 2011 வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் உம்மன் சாண்டி இருந்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் நீண்ட வருடங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒரே தலைவர் உம்மன் சாண்டி ஆவார். ஜக்கிய நாடுகளின் அவைகளினால் பொது சேவைக்கான விருது வழங்கப்பட்ட ஒரே இந்திய முதலமைச்சர் உம்மன் சாண்டி ஆவார். இவரின் மறைவின் காரணமாகவே தற்போது புதுப்பள்ளி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

2024ல் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இதனால் காங்கிரஸ் தனது சட்டமன்ற இடங்களை தக்க வைக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. மேலும் இந்த தேர்தல் அடுத்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Bypolls 2023: 6 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் - INDIA கூட்டணி எழுச்சி பெருமா?

Last Updated : Sep 8, 2023, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.